பக்கம்:உலகு உய்ய.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

உளதாகியிருக்கலாம். இப்போது, சுற்றி நான்கு பக்கங்க ளிலும் வேலி அடைத்து விட்டு, அதற்கு உட்பட்டது இன்னாருடைய இடம்-நிலம் என்றும், சுற்றி நான்கு பக்கமும் சுவர் எழுப்பி மேலே கூரைவேய்ந்து இதற்கு உட்பட்டது இன்னாருடைய வீடு என்றும், நாமாகச் செயற்கை முறையில்-சுற்றுச் சூழ்நிலைகளைக் கொண்டு இடம் என ஒன்றை வகுத்து வரையறை செய்து கொள் கின்றோம். எனவே, இயற்கையமைப்பின்படி நோக்குங் கால், இது இன்னாருடைய வயல்-இது இன்னாருடைய வீடு-இது இன்னாருடைய நாடு என்று சொல்வதற்கில்லை. செயற்கை முறையை அடிப்படையாகக் கொண்டே இட உரிமை வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த இட உரிமையும் என்றும் நீடிப்பதில்லை; ஒருவரது இடத்தை இன்னொருவர் விலைக்கு வாங்கிக் கொள்வதும் உண்டு.

எனவே, பகுத்தறிவுடைய மக்களினம், இடம் என ஒன்று யாருக்கும் இயற்கையில் தனி உரிமை உடையதன்று என்பதை நன்கு ஒர்ந்து உணர்ந்து, 'யாதும் ஊரே. யாவரும் கேளிர்” என்னும் பழங்காலத் தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் இமாலய-எவரெஸ்ட் உண்மை மொழியைப் பொன்னே போல் போற்றி, உலகம் முழுவ தையும் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவுடைமை யாக்க வேண்டும்.

பழைய பேய்:

வரப் போகும் புதிய பேயை விட பழைய பேயே மேல்” என்னும் பழமொழிக்கு ஏற்ப, இனிமேல் புதிய உலக அரசு ஒன்று தொடங்குவதனினும், இப்போதுள்ள ஐ.நா. மன்றத்தையே புதிய உலக அரசின் முதல்படியாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/279&oldid=544935" இலிருந்து மீள்விக்கப்பட்டது