பக்கம்:உலகு உய்ய.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

அடுத்தது: ஆள் துணை-ஆள் வலு: இந்தக் காலத்தில் அரசின் காவலும் துணையும் சீர்பெற இருப்பதால், தனிப் பட்டவர்க்கு மிகுந்த ஆள் வலுவேண்டா.

அடுத்தது: சேயும் தாயும் மிகுதியாக ச் சாவது: இந்தக் காலத்தில் புதிய மருத்துவ வசதிகள் பெருகியிருப் பதால் சாவு மிகவும் குறைவு. எனவே, இது பற்றிய அச்

சம் வேண்டா!

அடுத்தது: பிள்ளை பெறாதவர் பாவிகள்: பொறுப் பற்று மிகுதியான பிள்ளைகளைப் பெற்றுப் போட்டுச் செல்பவர்களே பாவிகள்: இவர்கள் தமக்கும் தொல்லை தேடிக்கொண்டவராவர்-தம் பிள்ளைகட்கும் சமுதாயத் துக்குங்கூட தொல்லை விளைவித்தவராவர். எனவே, இவர்களே கொடும் பாவிகள் ஆவர்.

அடுத்தது: சமுதாயத்தில் சிறுபான்மையினராயிருப் பது: சிறுபான்மையினருக்குப் பெரும் பான்மையினர் தொல்லை தரலாகாது; தொல்லை தர அரசும் இடம் தர லாகாது. சிறுபான்மையினர்க்கும் அரசு போதிய ஆதரவு தரவேண்டும். இவ்வாறு நடைபெறின், சிறுபான்மையினர் என்ற அச்சத்திற்கு இடமில்லை. இந்த ஆதரவு இந்தக் காலத்தில் கொடுக்கப்பட்டு வருவதாகவே தெரிகிறது. எனவே கவலை வேண்டா, சிறுபான்மையினர்க்குப் புரட் சிகரமான ஒரு வேண்டுகோள் வருமாறு: சிறு பான்மையி னர் பிள்ளைப் பேற்றைப் பெருக்குவதும், பெரும்பான்மையி னர் பிள்ளைப் பேற்றைச் சுருக்குவதும் ஒரே சமயத்தில் தொடர்ந்து நடைபெற்று வரின், ஒரு காலத்தில் இரு சாரா ரும் மக்கள் தொகையில் சமமாகி விடுவர். இந்த நிலைமை நேரக்கூடாது. இருவேறு சமூகத்தினர் சமமாக உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/28&oldid=544686" இலிருந்து மீள்விக்கப்பட்டது