பக்கம்:உலகு உய்ய.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279

கொண்டு, மேலும் பல படிகள் கட்டி அதை உயர்த்தி உலக அரசாகப் புது உருவம் கொடுக்கலாம். இதுகாறும் நடைபெற்று வந்த ஐ.நா. மன்றத்தின் செயல் முறைகள், புதிய அரசின் செயல் முறைகட்கு உரிய ஒத்திகையாகும்.

நாடுகளின் நிலை:

புதிய உலக அரசில் சிறு நாடுகள்-பெரிய நாடுகள் என்ற பாகுபாடு கூடாது. எல்லா நாடுகட்கும் ஒவ்வொரு வாக்குரிமை உண்டு-எல்லாம் சம உரிமை உடையவாகும். உலக அரசில் ஒவ்வொரு நாடும் ஒரு மாநிலம் (State) போல் இருக்கலாம். அல்லது இன்னொரு விதமாகவும் இருக்கலாம். அதாவது:- இந்தியப் பெருநாட்டில் பல மாநிலங்கள் (States) உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் பல மாவட்டங்கள் (Districts) உள்ளன. பல மாவட்டங் கள் சேர்ந்தது ஒரு மாநிலம்; பல மாநிலங்கள் சேர்ந்தது இந்தியா என்னும் ஒரு பெரிய நாடு. இதுபோல, உலக அரசில் ஒவ்வொரு நாடும் ஒரு மாவட்டம் போல் இருக்க லாம். குறிப்பிட்ட சில நாடுகள் சேர்ந்து ஒரு மாநிலம் போல் ஒரு மண்டலம் உருவாக்கப்படலாம். இவ்வாறு பல மண்டலங்கள் சேர்ந்தது உலகப் பேரரசாகும். எனவே, இனி எந்த நாட்டிலும் பிரிவினைக்கு இடமில்லை; மேலும் மேலும் பல நாடுகள் இணையும் கூட்டுறவுக்கே இடமுண்டு.

பத்து மண்டலங்கள்:

ஆட்சி (நிர்வாக) வசதிக்காக உலகைப் பின்வருமாறு பத்து மண்டலங்களாகப் பிரிக்கலாம். அவையாவன:

1. வட அமெரிக்க மண்டலம்: கானடா, கிரீன்லாந்து, ஒன்றிய அமெரிக்கா (U.S.A.), மெக்சிகோ, ஹாண்டுரஸ்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/280&oldid=544936" இலிருந்து மீள்விக்கப்பட்டது