பக்கம்:உலகு உய்ய.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285

பினரும் இருப்பர். இந்த இருவகை அமைச்சரவைகளிலும் பெரிதாக உலக அரசின் அமைச்சரவை இருக்கும்; இது மத்திய அமைச்சரவை எனப் பெறும்; இதனால் ஆளப்படு og LD$@u olurs (Central Government)srørůL@tb. QË 5 மத்திய அரசுக்கு, மக்கள் தொகை அடிப்படையில் ஒவ் வொரு நாட்டிலிருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பெறுவர். இவர்கள் கூடி உலகக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பர். அத்தலைவர் தம் அமைச்சரவைக்கு வேண்டியவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்.

தேர்தல், கட்சி அடிப்படையில் நடைபெறாது. தேர் தலுக்கு நிற்பவர்க்கு அகவை (வயது), கல்வி,பண்பு இன்ன பிறவற்றில் குறைந்த அளவாயினும்-குறிப்பிட்ட அளவா யினும் ஒரு வரையறை இருக்கும். குறிப்பிட்ட தகுதியுடை யவர்கள் யார்வேண்டுமானாலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மண்டலத்திலும் தேர்தலுக்கு நிற்கலாம். கட்சியின் பெயரால் போட்டியிராது; நிற்பவரின் தகுதியின் பெயரால் போட்டியிருக்கும். உரிய தலைவரை மக்கள் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுப்பர், இவர்கள் ஆட்சி அமைப்பின் உறுப்பு ஆவர்.

உலக அரசில் அரசியல் கட்சி முறை இல்லாமை யால், ஆளும் கட்சி என ஒன்றும் எதிர்க்கட்சி என ஒன்று அல்லது பலவும் இருக்க முடியாது. ஒரே அரசு ஆட்சி அமைப்பில் உள்ள உறுப்பினர்கள், நட்பு முறையில் ஆட் சித் தலைவர்கட்குச் சட்டமன்றத்திலோ, தனித்தோ,தங் கள் சூழ்வை (ஆலோசனையை) உரைக்கலாம். தவறு கண்டால் ஆட்சி மன்றத்தில் சுட்டிக் காட்டிக் கண்டித்துத் திருத்தலாம். இதனால் இவர்கட்கு எந்தத் தீங்கும் யாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/286&oldid=544942" இலிருந்து மீள்விக்கப்பட்டது