பக்கம்:உலகு உய்ய.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287

களும் சேர்ந்தது இந்தியப் பெரு நாடு; இதன் தலைநகரா கிய டில்லியில் உள்ள நீதி மன்றத்திற்கு மேல் உயர் நீதி losis ph’ (Supreme Court) argåry QLugt (b.

இந்த அடிப்பட்ையிலேயே உலக நீதி மன்றங்கள் அமையலாம். இவற்றோடு இன்னும் ஒன்று சேரவேண்டும். அதாவது: அனைத்து நாடுகளும் சேர்ந்த உலக அமைப் புக்குப் பொதுவாக அனைத்துலக நீதி மன்றம்’ ஒன்று அமைக்கப்படல் வேண்டும். இப்போது ஐ.நா. மன்றம் அமைத்திருக்கும் உலக நீதி மன்றத்தையே, இன்னும் பெரியதாய் வளர்த்துப் புதிய உலக அரசின் பொது நீதி மன்றமாக உயர்த்தி அமைத்து விடலாம்.

மேலே கூறியுள்ளவரையும் சரிதான். ஆனால் இந்த

அமைப்பில் ஒரு குறைபாடு உண்டு. அஃதாவது, ஒவ்வோர் ஊருக்கும் ஒரு நீதி மன்றம் இல்லாத குறையே அது. மிக

வும் சிறிய ஊரில் நீதி மன்றம் இல்லாவிடினும், இரண்டு அல்லது மூன்று சிற்றுார்களை இணைத்தாயினும் அவற்றிற் குப் பொதுவாக ஒரு நீதி மன்றம் அமைக்கலாம். பெரிய ஊர் ஒவ்வொன்றுக்கும் நகரம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்

வொரு நீதிமன்றம் அமைக்கமேண்டும். ஆனால், மேலே

கூறியுள்ள வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு, உலகம்

ஆகிய வற்றில் அமைக்கும் நீதி மன்றங்கட்கும் ஒவ்வோர் ஊரிலும் அமைக்கும் நீதி மன்றங்கட்கும் வேறுபாடுஉண்டு. அதாவது:

பண்டைக் காலத்தில் அரசின் தொடர்பு பெற்றோ பெறாமலோ ஊர்தோறும் நீதி மன்றம் இருந்தது; இந்தக் காலத்திலும் சில ஊர்களில் இருக்கிறது. இந்த ஊர் நீதி மன்றம் சட்டப் படிப்புப் படித்துச் சட்டப்பட்டம் (B.L.or LL.B.) பெற்றவர்களால் நடத்தப்படுவதன்று. ஊரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/288&oldid=544944" இலிருந்து மீள்விக்கப்பட்டது