பக்கம்:உலகு உய்ய.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இடங்களில் அடிக்கடிக் கலகம் ஏற்படக் கொலை-குத்து -வெட்டு நேர்வதையும், ஒரு சாரார் சிறுபான்மையின ராயும் மற்றொரு சாரார் பெரும்பான்மையினராயும் உள்ள இடங்களில் இவ்வாறு கலகம் நேராமையையும் உல கியலில் காணலாம். எனவே, இரு வேறு சமூகத்தினரும் ஒரே சமூகத்தினராய் ஒன்றி விடுவது நன்று.

அடுத்த காரணம்: பிற நாடுகளுடன் போர் புரிவதற் காக ஆள் வலு தேவை: உலகில் போர் கூடாது. ஒரு நாட்டினர் மற்ற நாட்டினருடன் ஒன்றி வாழ வேண்டும். பிள்ளைகளை மிகுதியாகப் பெறுவித்துப் போரின் பெய ரால் வீணே பலி கொடுப்பது கொடுமையிலும் கொடுமை.

அடுத்தது: இரண்டு பிள்ளைகள் மட்டும் பெற்றிருந் தால், இரண்டும் இறந்து விடின் என்ன செய்வது என்ற அச்சம்: இந்த அச்சம் ஒப்புக்கொள்ளக் கூடியதே! பிள் ளைகள் குறைவாயிருப்பதால் முழுக் கவனத்தையும் செலுத்தி முழு முயற்சியையும் செலவிட்டு விழிப்புடன் பேணிக்காத்தால், மருத்துவ வசதி மிகுந்த இந்தக் காலத் தில் பெரும்பாலும் இறப்பு நேராது. அவ்வாறு நேர்ந்து போயினும், பிள்ளை யிலார்க்குப் பொதுவாகச் சமூகம் பெரிய உதவி புரிய வேண்டும். சிறப்பாக, அரசு அவர் களைச் சிறந்த முறையில் பேணிக் காக்க வேண்டும். பிள்ளையிலார் பிறர் பிள்ளைகளைத் தத்து எடுத்துக் கொண்டும் மன நிறைவு பெறலாம்.

அடுத்தது: பல பிள்ளைகள் பெற்றால்தான் ஒரு பிள்ளை நல்ல பேர் சொல்லும் என்று சிலர் கூறும் சப்பைக் கட்டுக் காரணமாகும். இவர்கள், பெற்றோருக்குப் பதினான் காவது பிள்ளையாகிய இரவீந்தர நாத் தாகூர் போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/29&oldid=544687" இலிருந்து மீள்விக்கப்பட்டது