பக்கம்:உலகு உய்ய.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

இடையே வரும் வம்பு வழக்குகள், பல ஊர்கள் சேர்ந்த சிறு வட்டத்தின் (தாலுகாவின்) தலைநகரில் உள்ள நீதி மன்றத்திலேயே தீர்த்துக் கொள்ளப்படவேண்டும். ஒரு சிறு வட்டத்தார்க்கும் இன்னொரு சிறு வட்டத்தார்க்கும் உள்ள வழக்குகள், சிறு வட்டங்கள் பல சேர்ந்த மாவட் டத்தின் தலைநகரில் உள்ள நீதி மன்றத்தில் தீர்க்கப்பட வேண்டும். ஒரு மாவட்டத்தாருக்கும் வேறு மாவட்டத் தாருக்கும் உள்ள வழக்குகள், பல மாவட்டங்கள் சேர்ந்த மாநிலத்தின் தலைநகரில் உள்ள உயர்நீதி மன்றத்தில் (High court)தீர்க்கப்பட வேண்டும். ஒரு மாநிலத்தார்க்கும் மற்றொரு மாநிலத்தாருக்கும் உள்ள வழக்குகள், எல்லா மாநிலங்கட்கும் பொதுவான நாட்டின் தலைநகரத்தில் உள்ள மேல் உயர் நிதி மன்றத்தில் (Superme court) தீர்க் கப்பட வேண்டும். இரு நாட்டினர்க்கிடையேயுள்ள வழக்கு களே உலகநீதிமன்றம் செல்ல வேண்டும்.

ஒர் ஊரார், ஏறினது, சிறு வட்ட நீதிமன்றத்திலோ அல்லது மாவட்ட நீதிமன்றத்திலோ தம்வழக்தைத் தீர்த்து முடித்துக் கொள்ளும் படியாக நீதிமன்ற அமைப்பு முறை இருக்க வேண்டும். ஓர் ஊரார்க்குள் உள்ள வழக்கு, உயர் நீதி மன்றத்துக்கோ அல்லது மேல் உயர் நீதி மன் றத்துக்கோ செல்லும்படியா யிருக்கலாகாது. அதேபோல, ஒரு மாவட்டத்தாருக்குள் உள்ள வழக்கு, ஏறினது, மாநில உயர்நீதி மன்றத்திலேயே முடித்துக் கொள்ளும் படியான அமைப்பு வேண்டும். ஒரே மாவட்டத்தார்’ நாட்டின் தலை நகரில் உள்ள மேல் உயர்நீதிமன்றம் செல்லும்படி அமைப்பு இருத்தலாகாது.

ஒர் ஊராரின் மேல் முறையீட்டு (Appeal) வழக்கு

a uuris ĝ (High court) மன்றத்துக்கு வருமாயின், கன்னியாகுமரி ஊரினர், சென்னையில் உள்ள உயர்நீதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/291&oldid=544947" இலிருந்து மீள்விக்கப்பட்டது