பக்கம்:உலகு உய்ய.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

போகாமல், மண்டலப் பொது நீதி மன்றத்திலேயே தீர்த்துக்கொள்ளலாம். ஒரு மண்டத்தார்க்கும் இன் னொரு மண்டலத்தார்க்கும் உள்ள வழக்குகளை உலக நீதி மன்றத்துக்குக் கொண்டு செல்லலாம். இதுகாறும் கூறி வந்தனவற்றுக்குப் புறனடையாக - விதி விலக்காக - ஒன்று கூறுகிறேன்: எந்த ஊராரும் - மாநிலத்தாரும் - நாட்டாரும் - மண்டலத்தாரும், தவிர்க்க முடியாத நெருக் கடி ஏற்படின், உலக நீதிமன்றத்துக்குச் செல்லலாம். அங்கே எளிய முறையில் வழக்கு தீர அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வளவு ஏன்? மக்கள் அனைவரும் ஒற்று மையை உயிரென மதித்து ஒழுகின் நீதிமன்றங்கட்கு மிகுந்த வேலையிராது.

சுண்ணாம்பில் உள்ளது சூட்சுமம்:

வெற்றிலை பாக்கை வாயில் போட்டு மென்றால் வாய் சிவக்காது; அவற்றுடன் சுண்ணாம்பும் சேர்ந்தால் தான் வாய் சிவக்கும்; இதனால், வாய் சிவப்பாவதற்குச் ‘சுண்ணாம்பில் உள்ளது சூட்சுமம் என்பதை ஒரு பழ மொழியாகச் சொல்வது உண்டு. இதே போல, வேறு செயல்கள் சில வெற்றி பெறுவதற்கும் இன்றியமையாதநுட்பமான (சூட்சுமமான) ஒன்றின் வலிய துணையும் வேண்டியிருக்கும்; இதை அறிவுறுத்துவதற்காகவும் கண் ணாம்பில் உள்ளது சூட்சுமம்' என்னும் பழமொழியைப் பயன்படுத்துவதுண்டு. உலக அரசு அமைய, மேலே பல திட்டங்கள் தரப்பட்டுள்ளன. இவை வெற்றி பெறச் சுண் ணாம்பு போல் (சூட்சுமமாக) நுட்பமாயிருந்து உதவ வேண்டியவை வல்லரசுகளே. வளமுடைய வல்லரசுகளின் ஒத்துழைப்பு இன்றி மெல்லரசுகளால் எதையும் சாதிக்க வியலாது. வல்லரசுகள் தம்மிடம் உள்ள படைக்கருவிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/293&oldid=544949" இலிருந்து மீள்விக்கப்பட்டது