பக்கம்:உலகு உய்ய.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

னும் ஒழுகவேண்டும். உலக மக்கள் அறத் துறையால் திருந்த மாட்டார்கள் எனில், அரசு, மறத்துறையால் திருத்த வேண்டும்.அஃதாவது-கட்டாயச் சட்டதிட்டங் களின் வாயிலாகவும், குற்றங்கட்கு ஏற்ற ஒறுப்புகள் வாயி லாகவும் திருத்த வேண்டும்-வேறு வழியில்லை. இம் முறைகளைப் பின்பற்றின் உலக அரசு ஒழுங்குற நடை பெறும்.

ஒரே உலக அரசுக்கு உரிய ஆட்சி முறைகள் சிலவும் சீர்திருத்தங்கள் சிலவும் மேலே பரிந்துரைக்கப் பெற்றுள் ளன. இவையாவும் முற்ற முடிந்த முடிவுகள் அல்ல. உலக அறிஞர்கள் இவற்றை மறு ஆய்வு செய்து இன்னும் புதிய பரிந்துரைகளை வழங்கலாம்; உலகுக்கு ஒரே அரசை அமைக்க ஆவன செய்யலாம்; அரசுத் தலைவர்கள் அவற்றைச் செயல் படுத்தலாம்.

மக்கள் பலரைக் கொன்று நாடுகள் பல வென்று கொடுங்கோலாட்சி புரிந்த மன்னர் மன்னர்களை உல கம் மதித்துப் புகழ்வதில்லை. உலகில் கும்பலாகக் கூடிப் பேசுபவர் பேசுபவையெல்லாம், பிறர்க்கு ஈந்து உதவி செய்பவரிடம் நிலைத்து நிற்கும் புகழைப் பற்றியே என் னும் கருத்துடைய

'உரைப்பார் உரைப்பவை எல்லாம்இரப்பார்க்குஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்” (232)

என்னும் திருவள்ளுவரின் திருக்குறள் பாடலை ஈண்டு எண்ணிச் செயலாற்ற வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/295&oldid=544951" இலிருந்து மீள்விக்கப்பட்டது