பக்கம்:உலகு உய்ய.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

உலகம் நிலைத்து நிற்கிறது; இந்நிலை இல்லையேல் மண் ணுக்குள் மடிந்து மாய்ந்து போக வேண்டியதுதான். இத் தகைய அரிய கருத்துக்களைத் திருவள்ளுவர் திருக்குறள் நூலில் தெரிவித்துள்ளார்.

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டு இவ் வுலகு” (571)

'கண்ணோட்டத் துள்ளது உலகியல்; அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை” (572)

'பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல்

மண்புக்கு மாய்வது மன்’ (996)

என்பன திருக்குறள் பாடல்கள்.

உண்டால் அம்ம இவ்வுலகம்:

வாய்ப்பு வசதி உடையவர்களும் வளம் நிறைந்த வல்லரசு நாட்டினரும் தம் நலத்துக்கு மட்டும் முயலாமல், பிறர் நலத்துக்கும்-பிறநாடுகளின் நலத்துக்கும் முயன் றால், உலகம் ஒழுங்குற நடைபெறுவது உறுதி என்ற மாதிரியில், ஒரு தோற்றம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே, கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி என்னும் தமிழ்ப் பாண்டிய மன்னன், புறநானூற்றுப் பாடல் ஒன் றின் வாயிலாக உலகுக்கு அறைகூவல் விடுந்துள்ளான்.

அப்பாடல் வருமாறு:

'உண்டால் அம்ம இவ்வுலகம், இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே, முனிவு இலர், துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/299&oldid=544955" இலிருந்து மீள்விக்கப்பட்டது