பக்கம்:உலகு உய்ய.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

வர்களை எடுத்துக் காட்டுவர். தாகூர் நோபல் பரிசு பெற்ற உலக இலக்கிய மேதை யல்லவா? இவருடைய பெற்றோர் இரண்டு பிள்ளைகளோடு நிறுத்திக் கொண் டிருப்பின் இரவீந்திரநாத் தாகூர் உலகிற்குக் கிடைத்திருப் பாரா? ---என்றெல்லாம் கூறுவர். இன்னும், இவர் பத் தாவது பிள்ளை. அவர் பதினைந்தாவது பிள்ளை-எனப் பலரைக் குறிப்பிட்டு அடுக்கிக் கொண்டே செல்வர்.

இங்கே அடியேனைப் பற்றி ஒரு சிறிது உரைக்க ஒப்பு தல் வேண்டுகிறேன். யான் என் பெற்றோர்க்குக் கடைக் குட்டி-பன்னிரண்டாவது பிள்ளையாவேன். எனக்கு முன் பிறந்த பதினொருவரும் ஒரு நற்பெயரும் தேடாது மறைந்து போயினர். யான் ஒருவனே, பொதுவாக மக்கட் சமூகத்துக்கும், சிறப்பாக எனது தாய் நாடு - தாய்மொழி - இலக்கியம் முதலியவற்றுக்கும் ஒரு சிறிதாவது உழைத் துக்கொண் டிருக்கிறேன். என் பெயர் சண்முகம்; என் தந்தையாரின் பெயர் சுந்தரம்; இந்த இரு பெயர்களையும் இணைத்து என் பெயரைச் சுந்தர சண்முகனார்’ என வழங்கும்படிச் செய்து கொண்டேன். என் தந்தையார் 1942 ஆம் ஆண்டில் இறந்த பின்பும் இன்று (1986) வரை யும் அவரது பெயர் மறையாதபடிக் காத்து வருகிறேன். என் தந்தையார் பெரிய கணியர் (சோதிடர்). шт6йт பிறந்ததும், என் தந்தையார் என்பிறப்புக் குறிப்பைப் (சாதகத்தைப்) பார்த்து விட்டு, நம் பெயரைச் சொல்லக் கூடிய பிள்ளை பிறந்து விட்டான் - இனி அடுத்த பிள்ளை வேண்டா - என எண்ணிப் பிள்ளை பெறுவதை என் னோடு நிறுத்திக் கொண்டார் போலும்! இது வேடிக்கைக் கூற்று என விடுக்க. என் தந்தையார் சில பிள்ளைகளோடு அமைந்திருப்பின், ஒரு சிறிதாவது பொதுப்பணி புரியும் யான் எங்கள் குடும்பத்துக்குக் கிடைத்திருக்க மாட்டேனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/30&oldid=544688" இலிருந்து மீள்விக்கப்பட்டது