பக்கம்:உலகு உய்ய.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மீள் பார்வை

“தனக்கு மிஞ்சியே தானம்'என்பது ஒரு வழு மொழி, அவ்வாறு தமக்கு மிஞ்சியும் பிறர்க்குத் தராதவர்களே பெரும்பாலராக உள்ள இவ்வுலகத்தில், உலக நோக்கு உடையவர்கள் அரியர். ஆயினும், உலகில் ஆங்காங்கு அவ்வப்போது உலக நோக்குடைய அருளாளர்கள் ஒரு சிலர் தோன்றியுள்ளனர் என்னும் செய்தி முன்னர் விளக் கப்பட்டுள்ளது.

பொதுத் தோல்வி:

சுற்றுப்புறம் தூய்மையற்றிருப்பின், நாம் இருக்கும் இடம் தூயது என்று சொல்ல முடியாது. உலகில் தம் மைச் சுற்றிக் கோடிக் கணக்கானவர்கள் வறுமையாலும் பிணியாலும் இன்னபிறவற்றாலும் துன்புற்றிருக்க, ஒரு சிலர் மட்டும் இன்புற்றிருப்பது உண்மையான இன்ப மாகாது. உலகில் ஒருவர் துன்புற்றிருந்தாலும், அது, மக்களினம் முழுவதற்கும் உரிய பொதுத் தோல்வியே யாகும். இதனால்தான், சுப்பிரமணிய பாரதியார்,

'தனி யொருவனுக்கு உணவு இல்லை யெனில்

இந்தச் சகத்தினை அழித்திடுவோம்’

என்று புரட்சிக் கனலை வீசியுள்ளார். எனவே, உலகம் முழுவதும் இன்புற்றுய்ய, முன்னர்க்கூறப்பட்டுள்ள ஆய்வுக் கருத்துக்களை அடிக்கடி நினைவு கூர்ந்து அவற்றை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும். அவற்றை முன்னோட்டத்தின் மீள் பார்வை'யாக மீண்டும் ஒரு முறை தொகுத்து நோக்குவோமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/302&oldid=544958" இலிருந்து மீள்விக்கப்பட்டது