பக்கம்:உலகு உய்ய.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303

உலக மக்கள் அனைவருமே கட்டாயமாகக் கல்வி கற்கவேண்டும். அனைவரும் கல்வி கற்றால்தான், இன் றைய அறிவியலின் ஆக்கத்தை அனைவரும் பெற்று, ஆக்க வேலைகளில் ஊக்கத்துடன் ஈடுபட்டு நல்ல பண்

பாட்டுடனும் வளமாகவும் வாழ முடியும்.

இவை யாவற்றினும் இன்றியமையாததாக, உலகம் முழுதும் ஒரு குடை நிழற்கீழ் ஆளப்படவேண்டும்-அஃதா வது-உலகப்பொது அரசு உருவாக வேண்டும். இதன் பயன்

அளப்பரியது.

இன்ன பிற நல்ல வழிதுறைகளைக் கடைப்பிடித்து உண்மையுடனும் ஊக்கத்துடனும் செயலாற்றினால், எல்லா நலங்களும் வளங்களும் பெற்று உவகையுடன் உலகு

உய்யும் :

உய்க உலகு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/304&oldid=544960" இலிருந்து மீள்விக்கப்பட்டது