பக்கம்:உலகு உய்ய.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

இதைக் கேட்கக் கேட்க எனக்குக் குருதி கொதிக்கும். ஆனால் யான் ஒன்றும் பதில் பேசியது கிடையாது.

என் அண்ணியார் வைதது இருக்கட்டும். யானே சில சமயங்களில் என் பெற்றோரை நொந்தது உண்டு. எனக் குத் திருமணம் ஆவதற்குமுன்பே - என் இருபதாம் வயதில்என் பெற்றோர் இருவரும் இருதிங்கள் இடைவெளியில் அடித்தடுத்து இறந்து விட்டனர். என் அண்ணன்மாரும் அண்ணிமாரும் தமக்குள் பொருது கொண்டு என் திரு மணத்தைக் கவனிக்கவில்லை. எனவே, யான் என் பொறுப்பில் பெண் தேடி ஏதோ திருமணம் எனச் செய்து கொண்டேன். என் மண ஏற்பாடு எனக்குப் பல்லாண்டு கள் வரை மன நிறைவு இன்றிக் குறையாகவே இருந்தது. இதனால், வயதான காலத்தில் என்னைப் பெறாமல் இருந்திருக்கலாமே எனப் பெற்றோரை நொந்ததுண்டு. மூளைக் கட்டி (Brain Tumour) நோயால் யான் பல முறை ஊதிய இழப்புடன் உயிரோடு போராடுவது உண்டு; இப் போதும் உயிரோடு போராடிக் கொண்டே இந்த நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன். வயதான காலத்திலும் காம வெறி குறையாமல் என்னைப் பெற்றார்களே என்று யான் இது போன்ற நேரங்களிலும் நோவதுண்டு. பொறுப் பற்று என்னைப் பெற்றனரே - இந்த ஆண்டு என் பெற் றோர்க்கு நினைவுநாள் (திவசம்) கொண்டாடக் கூடாது என்று சில ஆண்டுகளில் யான் என் மனைவியிடம் கூறுவ துண்டு. விடாப் பிடியாய் என் மனைவி நினைவுநாள் கொண்டாடுவாள். எங்கட்குப் பிள்ளைகள் இருவரே என் பதையும் கூறிக்கொள்கிறேன். எண்ணத்தின் சிதறலால் சில சமயம் என் பெற்றோரை நொந்த யான், பன்னி ரண்டாவது - கடைக்குட்டிப் பிள்ளையாகிய என்மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/32&oldid=544690" இலிருந்து மீள்விக்கப்பட்டது