பக்கம்:உலகு உய்ய.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

கொடுமையாகும்: இந்தப் பசி ஒரறிவு உயிர் முதல் எல்லா வகையான உயிரினங்கட்கும் உண்டு. இதனை வெல்வது கடினமே. உயிர்கட்கு உள்ள இயல் பூக்கங்களுள் (Instincts) இந்த இனப்பெருக்கக் காம ஊக்கம் (Instinct of Reproduction) என்பதும் ஒன்று. அஃறிணை உயிரிகளால் இய லாவிடினும் உயர்திணை உயிரியாகிய மக்களினம் இத னைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல், விலங்குகட் கும் மாந்தர்க்கும் வேற்றுமையில்லாது போய்விடும்; அடுத்தடுத்துப் பல குட்டிகள் போட்டுக் கொண்டிருக்கும் பன்றிகளின் கதையாகிவிடும். இயற்கை முறையில் பிள் ளைப் பேற்றைக் கட்டுப்படுத்த இயலாவிடினும் செயற்கை முறையிலாவது கட்டுப்படுத்த முயல வேண்டும். மகனுக்கம் (Parental Instinct) அளவோடு இருக்க வேண்டும்.

இது காறும், பிள்ளைப் பேற்றைக் குறைக்கக்கூடாது என்போர் கூறும் காரணங்கட்கு மறுப்புக்கள் தரப்பட்டன. மிகுதியான பிள்ளைப் பேறு கூடாது என்பதற்குரிய கார ணங்கள் சில தம்மில்தாமே மேலே பெறப்பட்டிருப்பினும், அவற்றை இன்னும் சிறிது சிறப்பாக விதந்து காண்பாம் :

வேண்டாக் காரணங்கள்:

1) மிகுந்த பிள்ளைப் பேற்றால் சில குழந்தைகள் இறந்து போவது உண்டு.

2) இடைவெளி இன்மையால் தாய்க்கும் சேய்க்கும் நோய் உண்டாதல்-உடல் நலம் கெடுதல்-விரைவில் சாவை நோக்கிச் செல்லுதல்,

– 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/34&oldid=544692" இலிருந்து மீள்விக்கப்பட்டது