பக்கம்:உலகு உய்ய.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

கருத்தாகும். இஃதும் இயற்கைக் கட்டுப்பாட்டு முறை யைச் சேர்ந்ததாயினும், காலம் பார்த்துச் செயல்பட வேண்டியிருத்தலின், ஒரு வகைச் செயற்கைக் கட்டுப் பாட்டு முறைபோல் எண்ணத் தோன்றுகிறது.

2) அடுத்த கட்டுப்பாட்டு முறை கணவனது கவன (poop” (Husband Careful Method) agsh. all-sypal கொண்டிருக்கும்போது, கணவனது விந்து (Semen = ஆண் கரு) வெளிப்படும் நேரத்தில், அவன் தன் ஆண் குறி உறுப் பைப் பெண் குறி உறுப்பிலிருந்து உடனே எடுத்துவிட வேண்டும். இதனால், ஆண் கரு பெண் கருவோடு சேர்ந்து குழந்தை உருவாக வாய்ப்பில்லாமல் போகிறது. காம எழுச்சியினால்-உணர்ச்சி வயப்பட்டு மயங்கி விடாமல் கணவன் கவனமாக உடனே இதைச் செய்ய வேண்டு மாதலின், இது கணவனது கவன முறை எனப்படும். @#5 Galafium #65th (pamp (Withdrawal Method), உணர்ச்சியின் உயர் எல்லைக் கட்டத்தில் உள்ள ஒரு சில ரால் முடியாதுதான்! முடிந்தால் நல்லதே! இந்த முறை எளியது; செலவு இல்லாதது; துன்பம் தராதது; தொன்று தொட்டுப் பல நாடுகளிலும் பலராலும் பின்பற்றப்படுவது. பிள்ளை வேண்டாதவர், ஆண் கரு பெண் உறுப்புக்குள் சிந்த விடாதபடிக் கவனமாக இம் முறையைப் பின்பற்றிப் பயன் காணலாம்.

3) அடுத்த முறை: கருத்தடை நுரை மாத்திரை யைப் பயன் படுத்தலாகும். இத்தகைய மாத்திரை ஒன் றைப் புணர்ச்சிக்கு முன் பெண் உறுப்புக்குள் செலுத்த வேண்டும்; பின்பு புணர்ந்தால், பெண் உறுப்பிலிருந்து கசி யும் நீரில் இந்த மாத்திரை கரைந்து ஆண் கரு அணு பெண் கரு முட்டையுடன் சேராதவாறு தடுத்து விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/40&oldid=544698" இலிருந்து மீள்விக்கப்பட்டது