பக்கம்:உலகு உய்ய.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

ஆண் கரு அணுவை அழித்தும் விடும். இதற்கு அணு uDGF SL60 (p500' (The Spermicidal Method) 5TGörgy பெயராம்.

4) எலுமிச்சம் பழத்தைப் பாதியாக வெட்டி ஒரு பாதியைக் குடைந்து பள்ளமாக்கிப் பெண் உறுப்புக்குள் வைத்துப் புணர்ந்தால் ஆண் கரு பெண் கரு முட்டையை அடைய முடியாதவாறு தடை ஏற்படும். மற்றும் இப் பழத்தின் புளிப்பு ஆண் கருவை அழித்து விடுமாம்.

5) இவ்வாறே, பஞ்சுச் சுருள் (Cotton Plug), கடல் பஞ்சு (The Sponge) ஆகியவற்றைப் பெண் உறுப்புக்குள் வைத்துப் புணரினும் ஆண் கரு பெண் கரு முட்டையை அடையாதவாறு தடை ஏற்படும்.

6) தேனையோ வேப்பெண்ணெயையோ ஆண் உறுப் பிலும் பெண் உறுப்பிலும் தடவிக் கொண்டு புணர்ந்தா லும் கரு ஏற்படாதாம். தேனின் இனிப்பும் வேப்பெண் ணெயின் கசப்பும் ஆண் கருவை அழித்து விடுமாம்.

7) பெண் உறுப்புக்குள் வளையம் வைத்துப் புணர்வது

ஒரு வகை. முறை. மருத்துவ வல்லுநரின் அறிவுப்படி இதைக் கவனமாகக் கையாள வேண்டும்.

8) புணர்ச்சி முடிந்ததும் பெண் படுத்திராமல் உடனே எழுந்துவிட வேண்டும். கோழிபோல் குந்திக்கொண்டி ருந்தால் ஆண் விந்து வெளியாகி விடலாம் என இம் முறை பரிந்துரைக்கப்படுகிறது.

9) ஒரு வகுப்பாரில், பெண்கள் ஆண்களின் மீது இருந்து புணர்ச்சி செய்வதாகவும், அந்த வகுப்பினரி டையே பிள்ளைப் பேறு குறைவாயிருப்பதாகவும் சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/41&oldid=544699" இலிருந்து மீள்விக்கப்பட்டது