பக்கம்:உலகு உய்ய.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

தனியிடத்தில் தங்கவைத்தல், கணவனையும் மனைவியை யும் நீண்ட நாள் பிரிந்திருக்கச்செய்தல், கைம்பெண் மணத் தடை முதலியவற்றின் வாயிலாகக் கட்டுப்பாடு செய்யப் பட்டு வந்தது.

சில நாடுகளில் கருப்பு (பஞ்சம்) காரணமாக முதிய வரைக் கொலை செய்தல், பிணியாளரைத் துறவு பூணச் செய்தல் முதலிய முறைகள் கையாளப்பட்டனவாம்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் கருச் சிதைவு வாயிலா கவும் பிள்ளைப்பேறு தடுக்கப் பட்டது. பல நாடுகளில் கருச் சிதைவுக்கு அரசு தடை விதித்திருந்தும், இது மறைவாக நடந்துகொண்டுதான் இருந்தது. இப்போது சில வகைக் கருச் சிதைவுகட்கு அரசுகள் ஒப்புதல் அளித்து வரு கின்றன.

இந்தக் கொடிய முறைகளை நோக்க, அறுவை மருத்துவ முறை மிகவும் மேலானதாகும். கருத்தடை முறையை மதத் தலைவர்களும் அரசுகளும் பல நாடுகளில் எதிர்த்ததும் கருத்தடை பற்றிய நூல்கட்கு அரசு தடை விதித்ததும் உண்டு; இதைப் பரப்பியவர்கள் ஒறுப்புக்கு (தண்டனைக்கு

உள்ளானதும் உண்டு.

எதிர்ப்பின் காரணங்கள்

சில பல காரணங்களைக் காட்டிச் சிலர் கருத் த டையை எதிர்க்கின்றனர். அக்காரணங்க ளுள் சில:

கருத்தடையும் ஒருவகைக் கொலைக் குற்றமேயாகும் என்று சொல்லப் படுகிறது. அங்ங்னமெனில், கொசு, ஈ, எறும்பு, மூட்டைப் பூச்சி முதலியவற்றைக் கொல்வதற்கு என்ன பெயராம் ? புலால் புசிக்கலாமா ? இவை அ..நினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/44&oldid=544702" இலிருந்து மீள்விக்கப்பட்டது