பக்கம்:உலகு உய்ய.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

உயிர்கள் எனில், உயர்திணை உயிர்களும் கொல்லப்படுகின் றனவே. ஒரு முறை வெளியாகும் ஆணின் விந்தில் சுமார் முப்பது கோடி ஆண் கரு உயிர் அணுக்கள் உள்ளனவாம்: ஒர் ஊசி முனையில் உள்ள விந்தில் ஆயிரக்கணக்கான உயிர் அணுக்கள் உள்ளனவாம். இவற்றுள் ஒர் உயிர் அணு மட்டுமே பெண் கரு முட்டையுடன் கலந்து குழந்தையை உருவாக்குகிறதாம். மற்ற உயிர் அணுக்கள் அழிந்து போகின்றனவாம். பெண் கருமுட்டையும் இப்படியே. இங்கே பலகோடி உயிர்கள் கொல்லப்படுகின்றனவே. எனவே, இந்தக் காரணம் காட்டி மறுக்க முடியாது.

கருத்தடையால் உடல் நலம் கெடுகிறது-மூளைக் கோளாறு(பைத்தியம்)ஏற்படுகிறது-என்றெல்லாம் சொல்லி எதிர்க்கப்படுகிறது. எல்லாருக்கும்.இப்படி ஏற்படுவதில்லை : எங்கோ இரண்டொருவர்க்கு ஏற்படுவது விதிவிலக்காகும்; இவர்கட்கும் உடல் நலக் கேடு வேறு காரணங்களா லும் ஏற்படலாம். ஒரு சில மருந்துகள் ஒருசிலருக்கு ஒத்துக் கொள்ளவில்லைதான். அதற்காக எல்லாருமே அம்மருந்து களைக் கொள்ளாமல் விட்டுவிடுகின்றனரா என்ன?

ஆணும் பெண்ணும் கருத்தடை அறுவை மருத்துவம் செய்துகொள்வதால் சமுதாயத்தில் ஒழுக்கக் கேடு உண் டாவதாகச் சொல்லப்படுகிறது. அஃதாவது, ஆடவன் தன் மனைவியல்லாத மற்ற பெண்களுடனும், பெண் தன் கண வன் அல்லாத வேறு ஆண்களுடனும் உடலுறவு கொள்ள இதனால் வழி ஏற்படுகிறது; இதனால்தான், மனைவிமேல் நம்பிக்கையில்லாத ஆடவர் சிலர், மனைவி கருத்தடை செய்து கொள்வதைத் தடுத்துத் தாம் கருத்தடை செய்து கொள்கின்றனர்; ஆண் பெண் கருத்தடை முறையினால்: கற்பொழுக்கம் கெட, மக்கள் வாழ்க்கை விலங்குகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/45&oldid=544703" இலிருந்து மீள்விக்கப்பட்டது