பக்கம்:உலகு உய்ய.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

பித்துக்கொளித் தனமுமாகும். இது, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்'- என்ற மாதிரியாக இருக்கிற தன்றோ?

இவ்வாறு பல வழிகளில் நயமாக முயன்று பார்த்தும் பயன் இல்லை யெனில், இரண்டு-ஏறினது மூன்று குழந்தை கட்குமேல் பெறக்கூடாது என்ற சட்டத்தை இயற்றிப் படிப்படியாக நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும். இள மைத் திருமணங்களைத் தடுத்து, காலம் கடந்த திருமணங் கட்கு அரசுகள் ஆதரவு அளிக்க வேண்டும்.

பதினாறும் பெறுதல்

பிள்ளை பெறும் நோக்காடு பெண்கட்கேயன்றி ஆண் கட்கு இல்லை. பிள்ளைகளை வளர்ப்பதில் உள்ள தொல் லைகளும் ஆண்களினும் பெண்கட்கே மிகுதி. இஃதறியா மையால், ஆடவர் பெண்டிரைத் தம் காம வெறிக்கு அடிக் கடி ஆளாக்கிப் பிள்ளை பெறும் பொறிகளாக (இயந்தி ரங்களாக) மாற்றக் கூடாது. சில குடும்பங்களில், பெண்க ளின் கட்டுக்கு அடங்காத காமப் பசியைத் தணிக்கவே, ஆண்கள் விருப்பம் இல்லாமலேயே அடிக்கடி உடலுறவு கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் ஒரு கருத் துச் சொல்லப்படுகிறது. இவ்வாறு புகல்வது தாய்க்குலத் தைத் தாழ்த்துவதாகும். எல்லாப் பெண்டிரும் இத்தகை யர் அல்லர். எங்கோ ஒரு சிலர் இருக்கலாம்; அவர்களும் மனத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தத் துறையில் இருபாலாரும் கட்டுக்கு அடங்கித் தங்களையும் சமுதா யத்தையும் காக்க வேண்டும்.

குறிப்பாகத் தமிழ் நாட்டில் வழங்கப்படும் ஒரு செய் யை ஈண்டு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பெரியவர்கள் to- டியுளளது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/48&oldid=544706" இலிருந்து மீள்விக்கப்பட்டது