பக்கம்:உலகு உய்ய.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளந் திருமண மக்களை நோக்கி, 'பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’ என வாழ்த்தும் மரபு தமிழ் நாட் டில் உண்டு. மக்கள், பதினாறும் பெறுதல்’ என்றால் பதினாறு பிள்ளைகள் பெறல் எனத் தவறான பொருள் கொண்டு பிள்ளைகளைப் பெற்று அடுக்கத் தொடங்கிவிடு கின்றனர். பதினாறும் பெறுதல், என்றால், பதினாறு பேறுகளையும் (பாக்கியங்களையும்) பெறுதல் என்று பொருள் கொள்ளலே சரியாகும். பதினாறு பிள்ளைகளைக் குறிக்கு மெனில், பதினாறும் என 'உம்' போட வேண்டிய தில்லை; பதினாறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’ என்று சொன்னால் போதும். பதினாறும் என்ற உம்மை, பேறு கள் பதினாறு உள்ளன . அத்தனைப் பேறுகளையும் பெறுக என்ற பொருளைத் தன்னில் தானே தருகிறது. திரை ஒவியம் பார்த்து விட்டு வரும் கணவனும் மனைவியும் இதைக் கவனித்து நடந்து கொள்ள வேண்டும். உண்மை யில் பெற வேண்டிய பதினாறு பேறுகளைக் காளமேகப் புலவர் பின்வரும் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

'துதி, வாணி, வீரம், விசயம், சந்தானம், துணிவு, தனம், அதிதானியம், சவுபாக்கியப் போகம்,

அறிவு, அழகு, புதிதாம் பெருமை, அறம் செயல், நோயகல்,

பூண், வயது, பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே.”

இந்தப் பேறுகளுள், ச்ந்தானம்' என்னும் சொல்லால் மக் கட்பேறு குறிக்கப்பட்டுள்ளது. எனவே, பிள்ளைப் பேறு பதினாறு பேறுகளுள் ஒன்றென உணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/49&oldid=544707" இலிருந்து மீள்விக்கப்பட்டது