பக்கம்:உலகு உய்ய.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மூட நம்பிக்கைக்கு முற்றுப் புள்ளி

மக்கள் வாழ்க்கையை எளிமைப்படுத்திக் கொண்டு உய்வுபெற, மூடநம்பிக்கைகட்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். சாதி சமயம், நாள் - நிமித்தம் (சகுனம்) பார்த்தல், மந்திரம்மாயம், ஊழ்வினை, பழைமையில் பற்று,கணியம், முதலி யவற்றின் பெயரால் மக்கள் கொண்டுள்ள மூட நம்பிக் கைகட்கு அளவேயில்லை. இந்த அறியாமைச் செயல், பல்வேறு நாடுகளிலும் பல்வேறு மக்களிடையேயும் உள் ளது. இதனால், பொருட் செலவு, காலப் பாழ், முயற்சி விரயம், செயல்தடை, கால நீட்டிப்பு, மன அமைதி யின்மை முதலிய இழப்புகள் ஏற்படுவதன்றி, இறப்பும் நேரிடுகின்றது; முன்னேற்றங்கள் தடைப்படுகின்றன.

சாதி வேறுபாடு:

சாதி வேறுபாடு கூடாது என அருளாளர் பலர் அறி வித்துச் சென்றிருந்தும், அவர்கள் நடைமுறையில் செயல் படுத்திக் காட்டியிருந்தும், மக்கள் பலர் இந்தக் கொடு மையை விட்டா ரிலர். பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க் கும்’ என்பது திருவள்ளுவர் மொழி. ஒளவையார் என்னும் பெண்பாற் புலவர், மேல்சாதி - கீழ்ச்சாதி என்பவற்றுக்கு அழகான விளக்கம் அளித்துள்ளார்:

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி”. (நல்வழி - 2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/52&oldid=544710" இலிருந்து மீள்விக்கப்பட்டது