பக்கம்:உலகு உய்ய.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

என்பது ஒளவை அருள்மொழி. பிறர்க்கு உதவுபவரே மேல்சாதியினர்; உதவாதவர் கீழ்ச்சாதியினரே என்று இப் பாடலில் கூறியுள்ளார். அதி வீர ராமன் என்னும் பாண்டிய மன்னன் தனது வெற்றி வேற்கை என்னும் நூலில்,

“கல்லா ஒருவன் குல நலம் பேசுதல்

நெல்லினுள் பிறந்த பதரா கும்மே”. (31)

"நாற்பால் குலத்தில் மேற்பால் ஒருவன் -

கற்றில னாயின் கீழிருப் பவனே', (32)

'எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் -

அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்”. (33)

'அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்”. - (34)

எனக் கூறியுள்ளான். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழி யன் என்னும் பாண்டிய மன்னன், புறநானூற்றுப் பாடல் ஒன்றில்

‘'வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே”. (183)

6 róðr மொழிந்துள்ளான். கற்றறிந்தவரே மேல் சாதியினர் எனவும், அல்லாதவர் கீழ்ச்சாதியினர் எனவும் பாண்டிய மன்னர் இருவரும் பகர்ந்துள்ளனர்.

சமூகச் சீர்திருத்தம் பேசும் நாத்திகர் என்றல்லர் - ஆத்திகப் பெரியோர்களே - மேல் சாதிகள் எனக் கூறப் படும் இனங்களில் பிறந்த ஆத்திகப் பெரியோர்களே கூட சாதி வேற்றுமையைக் கண்டித்துள்ளனர். பிராம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/53&oldid=544711" இலிருந்து மீள்விக்கப்பட்டது