பக்கம்:உலகு உய்ய.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

தம் சாதியார்க்கே உதவி செய்வது ஒரு வழக்கமாக உள் ளது. இவர்கள், கீழ்ச் சாதியினர் எனச் சிலரைக் குறிப் பிட்டுக் கொண்டு, அன்னாரைத் தொடுதலோ - அன்னார் காண உண்ணுதலோ செய்வதில்லை; அன்னார் தொட்ட கலத்திலுள்ள தண்ணிரையும் அருந்துவதில்லை. அன்னார் தொட்டுத் துழவிய கலத்திலுள்ள நீரையும் பருகாதவர்கள் அன்னார் தொட்டுத் துழவிய எண்ணெயையும், நெய்யை யும் மோரையும் பாலையும் பயன்படுத்துகின்றனர். இஃது உலக வியப்புகளுள் ஒன்றாகும். தம்மால் எளிதில் பெறக் கூடிய தண்ணிருக்கு மட்டும் தீட்டு உண்டு; தம்மால் எளி தில் பெறமுடியாத மற்ற பொருள்கட்குத் தீட்டு இல்லை போலும்! இக்கொடியவர்களைத் திருத்துவதற்கு உரிய வழி, மற்றவர்கள் இவர்கட்கு எத்தகைய உதவியும் ஒத்து ழைப்பும் தராமல், இவர்களைச் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைப்பதேயாகும்.

மேல் சாதியினர் மூவகைத் தீட்டுகள் வைத்திருக்கின் றனர். கீழ்க் குலத்தாரைத் தொட்டால் வரும் தீட்டு ஒன்று; இது தொட்டு முட்டு’ எனப்படும். (முட்டு = தீட்டு) இதனினும் கொடியது கண்டு முட்டு ஆகும்; அஃதாவது, கண்டாலேயே தீட்டாம். இதனினும் கொடியது கேட்டு முட்டு’ ஆகும்;அஃதாவது, கீழானவரைப் பற்றிக் கேட்பதே தீட்டாம்: சில சமய வாதிகளும் பிறசமய வாதிகளிடத்தில் இதைப் பின்பற்றுகின்றனர். என்ன கொடுமை யிது! சாதி வேற்றுமையின் பெயரால் நடக்கும் சண்டை சச்சரவுகள் மிகப் பல; கொலைகளும் நடப்பதும் உண்டு. மக்களினம், ஒன்றே குலம்’ என உணர்ந்து சாதி வேற்றுமைக் கொடு மையைக் கைவிடவேண்டும்; சமுதாயத்தில் பிற்பட்டிருப்ப வரையும் உயர்த்துவதற்கு உரிய உதவியும் ஒத்துழைப்பும் நல்கவேண்டும். சாதி வேற்றுமையை அறவே அகற்றுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/55&oldid=544713" இலிருந்து மீள்விக்கப்பட்டது