பக்கம்:உலகு உய்ய.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

தற்கு உரிய முதன்மையான வழியாகிய கலப்புத் திரு மணத்தை மக்களினம் கடைப்பிடிக்க வேண்டும்.

மத வேற்றுமை:

சாதி வேற்றுமையினும் மத வேற்றுமை கொடியதென லாம். சாதி வேற்றுமைக் கொடுமை உள்நாட்டோடு நின்று விடலாம். மத வெறியால் விளைந்த போர்களும் பிணக்குகளும் உலகறிந்த வரலாறாகியுள்ளன. மதத்துக்கு மதம் பகை; ஒரு மதத்துக்குள்ளேயே பல பிரிவுகள்; அந் தப் பிரிவுகட்குள்ளே பல பிணக்குகள்; இந்தப் பிரிவினை களால் உலகில் ஏற்பட்ட - ஏற்பட்டு வரும் விளைவுகளை இங்கே விவரிக்க இடம் போதாது. மதவாதிகள் பலர் மதம் பிடித்து அலைகின்றனர். தத்தம் மதங்களைப் பரப் பவும் தம் மதத்தார்க்கு மட்டுமே நன்மைகள் புரியவும் அவர்கள் பெருமுயற்சி எடுத்துக் கொள்கின்றனர்.

இத்தகைய போராட்ட உலகில், மத வெறியைத் தணிக்கவும் அகற்றவும் அரும்பாடுபட்ட அருளாளர் களும் இருக்கத்தான் செய்தனர். தமிழ்நாட்டில் வாழ்ந்த வடலூர் இராமலிங்க வள்ளலார் எம் மதமும் சம்மதம் என்னும் கொள்கையினராய் அதனை உலகில் பரப்பவும் பாடுபட்டார்: -

'சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே”.

சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்

சாத்திரக் குப்பையும் தணந்தேன்’’.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/56&oldid=544714" இலிருந்து மீள்விக்கப்பட்டது