பக்கம்:உலகு உய்ய.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

என்பன அவர்தம் பாடல்கள். இத்தகைய அருளாளர்கள் ஏற்றிக் கொண்டிருக்கும் அருள் விளக்குகள், மதவெறி என்னும் சூறைக் காற்றால் அணைக்கப்பட்டுக் கொண்டுள் ளன;எம் மதத்தினர் கூறும் கடவுள் உண்மைக் கடவுள்? உல கத்தில் எத்தனை கடவுளர்கள் உள்ளனர்? ஒன்றே குலம் - ஒருவனே தேவன்’ என்பது திருமூலரின் திருமந்திர மொழி. இந்நிலையில், கடவுள் பெயராலும் மதங்களின் பெயராலும் போரிட்டுக் கொள்வது பெரிய மடமை யாகும். &

இன - நிற வேற்றுமைகள்:

ஆரியர் - திராவிடர் போன்ற இன வேற்றுமை வெள்ளையர் - கறுப்பர் என்ற நிறவேற்றுமை முதலிய கொடுமைகளும் ஒழிய வேண்டும். ஆப்பிரிக்கக் கண்டத் திலும் அமெரிக்கக் கண்டத்திலும் நிறவேற்றுமையால் ஏற் பட்ட - ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்க்கவே அதிர்ச்சி தருகிறது. கறுப்பர்களைக் காணவும் அவரொடு பழகவும் வெள்ளையர்கள் சிலர் விரும்ப வில்லை. தடுக்க முடியாத இயற்கையின் வன்மையால் கரு நிறத்தைப் பெற்றிருப்பது கறுப்பர்களின் குற்றம் அல்லவே! இவ்வுண் மையை யுணர்ந்து, அவர்களையும் மற்றவர்கள் அணைத்து ஆதரித்துச் செல்வதே அறிவுடைமை யாகும் - அஃதே உயரிய மக்கட் பண்பாகும். வடலூர் வள்ளலாரின்

'பித்தெலாம் உடைய உலகர்தம் கலகப்

பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ”. “எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி யுள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம்தாம் சுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/57&oldid=544715" இலிருந்து மீள்விக்கப்பட்டது