பக்கம்:உலகு உய்ய.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமென நான் தேர்ந்தேன்..”

என்னும் அறிவுரையினை உலகினர் ஒர்ந்துணர்ந்து நடைமுறையில் செயல்படுத்து வாராக! -

நாள்-நேரம் பார்த்தல்:

எந்தச் செயலையும் நல்ல நாளும் - நல்ல நேர மும் பார்த்துச் செய்ய வேண்டும் என்னும் அழுத் தம் திருத்தமான நம்பிக்கை மக்கள் பலரிடையே உள்ளது. மேலை நாட்டினரினும் கீழை நாட்டி னரிடையே இந்த நம்பிக்கை மிகுதியாக இருப்ப தாகத் தெரிகிறது. பொறுமையாகச் செய்யக் கூடிய செயல்களை - எப்போது வேண்டுமானாலும் காலம் தள் வளிச் செய்யலாம் என்பதாள செயல்களை, முன் கூட்டி நல்ல நாள் - நல்ல நேரம் பார்த்துச் செய்வதால் இழப்பு ஒன்றும் இல்லை; ஆனால் உடனடியாகச் செய்யாவிடின் உயிருக்கே இழப்பு நேரிடும் படியான செயல்களைக் கூ ட - கட்டாயச் செயல்களைக் கூட - உடனே செய்யாமல், நாள் நன்றாக இல்லை.நேரம் நன்றாக இல்லை எனத் தள்ளிப் போடுவது எவ்வளவு பெரிய அறியாமை! இந்த அறியாமை நடைமுறையில் உள்ளது. இதனால் நேரும் இழப்புகள் பல. .

வெள்ளிக்கிழமை வளர்ந்த நாள், என்னும் நம்பிக்கை இந்தியாவில் - தமிழ்நாட்டில் உள்ளது. வெள்ளிக் கிழமை யில் ஒன்றைத் தொடங்கினால், அது விரைவில் முடியா தாம் - வளர்ந்து கொண்டே போகுமாம். எடுத்துக்காட்டு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/58&oldid=544716" இலிருந்து மீள்விக்கப்பட்டது