பக்கம்:உலகு உய்ய.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

வற்றையே முற்றும் பின்பற்றுவது பேதைமையாகும். இவ் வாறு பழமையில் மட்டும் பற்றுடைய பாமரப் பெண் மக்கட்கும், இன்னும் திருத்தமுறாது பழைய காட்டு மிராண்டி முறையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பழங் குடி மக்கட்கும், போதிய கல்வியறிவு அளித்து, அவர் களையும் திருத்தி முன்னேறச் செய்வது அரசின் கடமை மட்டுமன்று-சமுதாயத்தின் கடமையுமாகும்.

கனா நம்பிக்கை:

கனாவிலும் நல்லகனா-கெட்டகனா என இருப்பதாக வும், இன்ன விதமான கனா கண்டால் நல்ல பயனும்இன்ன விதமான கனா காணின் கெட்ட பயனும் உண்டா வதாகவும் விவரிக்கும் கனா நூல் என்னும் கலை நூல் உண்டு. மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே இந்த நூல் தோன்றியிருக்க வேண்டும். கனவுக்கும் நடைமுறைப் பயனுக்கும் உண்மையில் தொடர்பே யில்லை. கனா நூல் ஒருவகை மூட நம்பிக்கை நூலே. கனாக்களைக்கண்டு, அவற்றிற்கு என்னென் னவோ பயன்கள் கற்பித்து மக்கள் அல்லல் உறுவது மிகவும் இரங்கத்தக்கதாகும். இந்த நிலைமை நீங்க வேண்டும்.

கணியம் (சோதிடம்):

கணிய நூல்கள் பல உள்ளன. மக்களுள் பெரும் பாலோர் கணியத்தில் (சோதிடத்தில்) மிகுந்த நம்பிக்கை உடைவராயுள்ளனர். கணியர்களிடம் தங்கள் பிறப்புக் குறிப்பைக் (சாதகத்தைக்) காட்டிப் பயன் கேட்கின்றனர்.

– 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/66&oldid=544724" இலிருந்து மீள்விக்கப்பட்டது