பக்கம்:உலகு உய்ய.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

நல்லன நடக்கும் எனக் கூறின் இன்புறுவதும், அல்லன. நடக்கும் எனக் கூறின் துன்புறுவதும் மக்கள் இயல்பு. கணியர் (சோதிடர்) கூறியபடி நல்லன. நடைபெறவில்லை யெனில் மக்கள் பெரிய ஏமாற்றமும் மனத்துயரும் அடைந்து சோர்ந்து விடுகின்றனர். இந்த வீண் சுமை ஏன்? கணியம் பார்த்தே எந்தச் செயலையும் தொடங்குவது பலர்க்குப் பழக்கம். நாளும் கோளும் நன்றாயில்லை எனக் கணியர் கூறி விடுவாராயின், சிலர் தள்ளிப் போடுவதும், சிலர் அறவே செயலை நிறுத்தி விடுவதும் உண்டு. எடுத்த தற்கெல்லாம் கணியம் பார்த்தால் வாழ்க்கை என்னாவது? கணியர்கள், காசுக்காக, இல்லாதனவும் பொல்லாதனவும் கூறி ஏய்ப்பதும் உண்டு.

கணி நூலின் வாயிலாக எல்லா உண்மைகளையும் எதிர்கால நடைமுறைகள் யாவற்றையும் கூறிவிட முடி யாது. கோள்களின் இயற்கையமைப்பை மையமாகக் கொண்டு, அறிஞர்களால் சில உண்மைகள் ஆராய்ந்து கூறப்பட்டுள்ளன. அறிஞர்கள் கூறுவனவற்றுக்கும் காசுக் காகக்கணியம் பார்ப்பவர்கள் கூறுவனவற்றுக்ரும் இடையே வேற்றுமை மிக உண்டு. அறிவியல் அடிப்படையில் கிடைத் துள்ள சில உண்மைகள்:

ஞாயிற்றினிடம் காணப்படும் புள்ளிகட்கும் பூவுலக உயிர்கட்கும் தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர் கள் கூறியுள்ளனர். ஞாயிற்றில் புள்ளிகள் மிகுதியானால் மழை மிகுதியாம்; புள்ளிகள் மிகுதியாயின் உலகில் போர் நடக்குமாம்-பொருளாதார நெருக்கடி ஏற்படுமாம். கி.பி. 1939 ஆம் ஆண்டில் இவ்வாறு புள்ளிகள் மிகுந்ததால் இரண்டாவது உலகப் பெரும் போர் தொட்ங்கப் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஒரு திங்களில் பதினைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/67&oldid=544725" இலிருந்து மீள்விக்கப்பட்டது