பக்கம்:உலகு உய்ய.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

நாட்களுக்குள், ஞாயிற்றுப் பிடிப்பும் (சூரிய கிரகணமும்) திங்கள் பிடிப்பும் (சந்திர கிரகணமும்) ஒரு சேர ஏற்படின், உலகில் போர் மூளுமாம் - அரசு அழியுமாம் - பஞ்சம் உண்டாகுமாம். இரண்டாவது உலகப் பெரும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 1944 ஆம் ஆண்டு, இவ் வாறு, ஒரே திங்களின் பதினைந்து நாட்களுக்குள் இரு வகைப் பிடிப்புகளும் (கிரகணங்களும்) நடைபெற்றனவாம். இந்தச் செய்தியை நம்முன்னோர்கள் அறிந்திருந்தனர் என்பதை,

'அருக்கனையும் சோமனையும் ஐம்மூன்று நாளில் பொருக்கில் அரவங்கள் தீண்டின் - செருக்களத்து மன்னர் மடிவார் மடியாரே யாமாயின் அன்னம் அரிதாய் விடும்'.

என்னும் தனிப் பாடல் உணர்த்தும். வானத்துக் கோள் களின் நிலையில் ஏற்படும் மாறுதல்களின் விளைவுகளைப் பல முறை பட்டறிவு வாயிலாக அறிந்ததைக் கொண்டு முன்னோர்கள் சில செய்திகளை எழுதிவைத்துச் சென்றுள்ளனர். அவற்றுள் பல உண்மையாகவும் உள் ளன. இரு கிரகணங்களும் தோன்றுவது சரியாயிருப்பதைப் பார்க்கலாம். இதனால்தான், சாத்திரம் பொய்யென் றால் கிரகணத்தைப் பார்’ என்னும் பழமொழி எழுந் துள்ளது. ஆனால், இக்கால அறிவியல் ஆராய்ச்சி அறிஞர் கள் கணிக்கும் வானிலை முறைக்கும், அக்கால முன்னோர் கள் கணித்த வானிலை முறைக்கும் இடையே வேறுபாடு உண்டு.

முழு நிலவின்போது கடல் பொங்குகிறது. அமா வாசை நாளிலும் கார்த்திகை நாளிலும் செரிமானம் குறைவென்பதால், அந்நாளில் உண்ணா நோன்பு வைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/68&oldid=544726" இலிருந்து மீள்விக்கப்பட்டது