பக்கம்:உலகு உய்ய.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பொருளியல் கோட்பாடு

பொருளின் இன்றியமையாமை:

மக்கள் வாழ்க்கை எளிதாய் - இனிமையாய் நடை GALDL *GLITG6fiuá G5TLLITG)" (Economic System) மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பொருள் இல்லாமல் உலகில் வாழ முடியாது. பொருள் இருப்பின், பொருட்படுத்தக் கூடாதவரும் பலராலும் பொருட் படுத் தப் பெறுவர். கல்லாவிடினும் பொருள் உள்ளவரை எல் லாரும் எதிர் கொண்டு போற்றுவர். இல்லாதவரை மனைவி, தாய் உட்பட எல்லாரும் இகழ்வர். இல்லாத வரின் வாய்ச் சொல்லுக்கு மதிப்பு இல்லை. என்றும் இ..து உலக இயற்கை. இக் கருத்தினை,

'அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு”. (247) "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்”. (751)

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு”. (752)

'அறஞ்சாரா நல்குரவு ஈன்றதாயானும் பிறன் போல நோக்கப் படும்”. (1047) என்னும் திருவள்ளுவரின் திருக்குறள் பாக்களாலும்,

'கல்லானே யானாலும் கைப்பொருள்ஒன் றுண் டாயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/70&oldid=544728" இலிருந்து மீள்விக்கப்பட்டது