பக்கம்:உலகு உய்ய.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர்- இல்லானை இல்லாளும் வேண்டாள் மற் lன்றெடுத்த தாய் வேண் டாள்

செல்லா தவன்வாயிற் சொல்”. (34)

என்னும் ஒளவையாரின் நல்வழிப் பாடலாலும் இன்ன பிற வற்றாலும் அறியலாம். எனவே, பொருளை எப்படி பெறு வது - பொருளாக்கம் எவ்வாறு வளர்ந்தது - என்ற வர லாறு அறியப்பட வேண்டிய தாகும்.

தொடக்க காலப் பொருளியல்;

வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட (Pre-Historical -Period) காலமாகிய - மக்கள் வாழ்க்கையின் தொடக்க காலத்துப் பொருளியல் (Primitive Economics) இயற்கை யை யொட்டி அமைந்திருந்தது. அப்போது மனித முயற்சி அவ்வளவாகத் தேவைப்பட வில்லை. இயற்கையாகக் கிடைத்த காய் - கனி - கிழங்கு முதலியவற்றை அப்போது மக்கள் உண்டனர்; விலங்கு - பறவை முதலிய வற்றைக் கொன்றும் தின்றனர். அப்போது மக்கள் தொகை குறைவாயிருந்ததால், இயற்கையாகக் கிடைத்த உணவுப் பொருள்கள் போதுமானவையாயிருந்தன. இயற் கையாகக் கிடைத்த நீரைப் பருகினர். குகைகளிலும் மரங் களின் கீழும் மேலும் தங்கியிருந்தனர்.

நாளடைவில் நெருப்பின் பயனை அறிந்து சமைத்து உண்ணக் கற்றுக் கொண்டனர். கற்களாலும் மரங்களா லும் கருவிகள் செய்து பயன் படுத்தினர். ஆண்கள், வேட் டையாடுதல் முதலிய வற்றால் உணவுப் பொருள்களைத் தேடிக் கொண்டு வருதலும் பெண்கள் சமைத்தலும் முத லியனவாக ஆண் - பெண் வேலைப் பகிர்வும் ஏற்பட்டது. இந்தக் காலம் கற்காலம் (Stone Age) எனப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/71&oldid=544729" இலிருந்து மீள்விக்கப்பட்டது