பக்கம்:உலகு உய்ய.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

யோர் செல்வர்களாகவும் பெரும்பான்மையோர் வறிஞர் களாகவும் இருக்கும் நிலை சிலரின் உள்ளத்தை உறுத்த லாயிற்று. சிறுபான்மைச் செல்வரிடையே நுகர்வு பெரு மளவில் இருப்பதும் பெரும்பான்மை வறிஞர்களுக்கு 'நுகர்வு'எட்டாததாக இருப்பதும் ஆன நிலைமை தொழி லாளர் புரட்சியைத் தோற்றுவிக்கலாயிற்று. இதனால்: சமுதாயத்தில், செல்வர்கட்கும் வறியவர்கட்கும் இடையே. முதலாளிகட்கும் தொழிலாளிகட்கும் இடையே பல மோதல்கள் முகிழ்க்கலாயின; நுகர்வு எல்லாருக்கும் சம மாகக் கிடைக்க வேண்டும்-என்னும் புரட்சிக் கருத்து புய லாக வீசத் தொடங்கியது. இவ்வாறாகக் கம்யூனிசம்' என்னும் பொதுவுடைமை இயக்கத்திற்கு வித்திடப்பட்டது. பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிரானது முதலாளி முறைக் கொள்கை; எனவே இதனை முதலில் கண்டு, பின் னர்ப் பொதுவுடைமைக்குச் செல்வோம்.

முதலாளி முறைக் கொள்கை:

பொறிகளின் (எந்திரங்களின்) உதவியால் தொழில் புரட்சி தோன்றிப் பொருள் வளங் கொழித்ததையடுத்து 'முதலாளி முறை (capitalism) ஏற்பட்டது. முதலாளி முறை என்பது, தனி மனிதர், அரசின் விதிகட்கு உட்பட்டு தம் கைம் முதலைக் கொண்டு தொழில் நடத்திப் பொருள் வளம் பெருக்கித் தாம் பெருஞ் செல்வராவதாகும். இம் முறையில் தேவை நோக்கினும் ஆதாய நோக்கே முத லிடம் பெற்றது. தொழிலமைப்பு முதலாளிகளின் முழு உடைமையாகும்; ஊதியம் முழுவதும் அவர்கட்கே உரியது. மூலப் பொருள்களுடன் தொழில் அமைப்பையும் தொழி லாளரின் உழைப்பையும் அவர்கள் விலைக்கு வாங்கிக் கொண்டு தொழில் நடத்துவர்; அவர்கள் வைத்ததே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/76&oldid=544734" இலிருந்து மீள்விக்கப்பட்டது