பக்கம்:உலகு உய்ய.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

விலை-அவர்கள் கொடுத்ததே கூலி. தொழிலாளிகள் உழைத்துத் தேய்வதும், முதலாளிகள் தொழிலாளிகளை ஆட்டிப்படைப்பதும், தொழிலாளிகள் முதலாளிகளை எதிர்பார்த்து வாழ்வதும், இம்முறையில் இயற்கையாயின. முதலாளிகள் கொழுக்கலாயினர். பொதுவுடைமைக் கொள்கை:

முதலாளி முறைக் கொள்கைக்கு எதிர்மாறானது கம் யூனிசம்(communism)என்னும்பொதுவுடைமைக்கொள்கை யாகும். communis என்னும் இலத்தீன் சொல்லுக்கு 'பொது - பொதுவான-சமூகம் தொடர்பான - என்பது பொருளாகும். சோஷலிசம்’ (Socialism) என்பதும் ஏறக் குறைய இதுவேதான். சமூகத்தின் பொது நலத்தைக்கருதி நாட்டிலுள்ள உடைமைகள் முழுவதையும் சமூகப் பொது வுடைமையாக்குவது சோஷலிசமாகும். சோஷலிசம்’ என் னும் பெயரைக் கம்யூனிசம் என்னும் சொல்லுக்குச் சிறிது முற்பட்டதாகக் கொள்ளலாம் போலும்!

கார்ல் மார்க்ஸ் (Karl Marx: 1818-1883) என்னும் செர்மனி அறிஞர் பொதுவுடைமைக் கொள்கையின் தந்தை யாவார். இவர் 1848 ஆம் ஆண்டு இக்கொள் கையை வெளியிட்டார். இது விரைவாகப் பரவத்தொடங் கியது. முதல் முதலாக இந்தக்கொள்கை லெனின் என் பவரால் பின்பற்றப்பட்டு ரஷ்ய நாட்டில் நடை முறைக்கு வந்தது; அங்கே கம்யூனிச ஆட்சி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து உலகில் பல நாடுகளில் இக்கொள்கை பர விற்று. இதன் பயனாய் இப்போது உலகில் பல நாடுகளில் கம்யூனிச ஆட்சி நடைபெறுகிறது. இது மார்க்ஸ் அவர்கள் வெளியிட்ட கொள்கையாதலின், இதற்கு மார்க்சிசம் (Marxism)என்ற பெயரும் உண்டு. இதன் இன்றியமையாக் கோட்பாடுகளாவன-;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/77&oldid=544735" இலிருந்து மீள்விக்கப்பட்டது