பக்கம்:உலகு உய்ய.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

1. எல்லா இயற்கை வளங்களும் தொழில் நிறுவனங் களும் நாட்டின் உடைமையாகும்.

2. தனிப்பட்டவர்க்குச் சொத்துரிமை யில்லை. 676ು லாம் சமூகச் சொத்துக்களாகும்.

3. உண்டாக்கும் பொருள்கள் யாவும் சமூகத்தின் பொது வுடைமை யாகும்.

4. வருவாயைச் சமூக மக்களிடையே பரவலாகப் பங்கீடு செய்ய வேண்டும்.

5. தனியார் தொழில் முயற்சிக்கு இடமில்லை; சமூகக் கூட்டுத் தொழில் முயற்சிக்கே இடமுண்டு.

6. உண்டாக்கம் (உற்பத்தி) தனியாரின் ஊதிய (இலாப) நோக்குக்காக அன்று; சமூகப் பொதுநல நோக் கத்திற்கேயாம்.

7. புதிய சமூக அமைப்பைப் படைப்பவர்களாதலின் தொழிலாளர்கள் மிகவும் இன்றியமையாதவர்களாவர்.

8. நிலம் (வயல்) தனியுடைமையன்று; பயிரிடுபவரின் தரத்துக்கும் ஆற்றலுக்கும் ஏற்பப் பகிர்வு செய்து தந்து பயிரிடுவிக்கப்படும்,

9. ஒவ்வொருவரும் தத்தம் ஆற்றலுக்கு ஏற்ப வஞ் சனையின்றி உழைக்க வேண்டும்.

10. அனைவர்க்கும் தேவையை நிறைவு செய்யும் பொருள்கள் அளிக்கப்பட வேண்டும்.

இன்ன பிற, பொதுவுடைமை இயக்கத்தின் இன்றி

யமையாக் கோட்பாடுகளாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/78&oldid=544736" இலிருந்து மீள்விக்கப்பட்டது