பக்கம்:உலகு உய்ய.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இவ்வாறாக, எல்லா மொழிகளிலும் உள்ள-எல்லா மதங்களையும் சார்ந்த அறநூல்கள் யாவும், பலர்க்கும் பகுத்தளிக்க வேண்டும் என்னும் பொதுவுடைமைக் கொள் கையின் இன்றியமையாக் கூறை வற்புறுத்திக் கொண்டுள் ளன. இங்கே, சுப்பிரமணிய பாரதியாரின் புரட்சிப் பாடல் ஒன்று அதிர்ச்சி தருகிறது.

தனி யொருவனுக்கு உணவில்லை யெனில்

சகத்தினை அழித்திடுவோம்’.

என்பது அந்தப் பாடல் பகுதி. உலகில் ஒருவனுக்கு உணவு கிடைக்க வில்லை யெனினும் இந்த உலகமே அழிவதாகுக! என்று பாரதியார் புரட்சிக் கனல் கக்குகிறார். திருவள்ளு வரோ, உலகில் ஒருவன் இரந்து (யாசித்து) உயிர்வாழ நேரிடினும், இவ்வுலகைப் படைத்த கடவுளே கெட்டழி யட்டும்-என்று கடவுள் தலைமேலேயே கையை வைக் கிறார்.

'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.” (1062)

என்பது அவரது திருக்குறள் பாடல். எனவே, பொது வுடைமைக் கோட்பாட்டின் மைய உயிர்நாடிக் கூறு பொது வாக எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப் படக் கூடியதே யாம்.

கலப்புப் பொருளியல்

மேலே, முதலாளி முறைக் கொள்கையும் பொதுவுடை மைக் கொள்கையும் பேசப்பட்டன. இவ்விரண்டும் ஒரளவு இணைந்தது போன்றதான கலப்புப் பொருளியல் (Mixed Economies) என்பதும் நடைமுறையில் உள்ளது. இந்தியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/81&oldid=544739" இலிருந்து மீள்விக்கப்பட்டது