பக்கம்:உலகு உய்ய.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

போன்ற நாடுகளில் தனியார் முயற்சியிலும் தொழில் நடப்பதையும் அரசின் முயற்சியிலும் தொழில் நடப்பதை யும் காணலாம். சில தொழில்கள் தனியார் நடத்துவதற்கு ஏற்றனவாயும் வேறு சில அரசு நடத்துதற்கு ஏற்றனவா யும் இருக்கும். தனியார் துறைக்கு அரசு உதவுவது உண்டு. தனியார் தொழிலின் ஊதியம் தனியாரைச் சாரும். அர சின் தொழில் ஊதியமோ நாட்டுக்கு-மக்கள் சமுதாயத் துக்கு உரியதாகும். தனியார் தொழில் முயற்சியும் அர சின் விதிகட்கு உட்பட்டிருக்கும்படி கவனித்துக் கொள்ளப் படும். தனியார் தொழில் முயற்சி ஊழல்கள் உடைய தாய்க் காணப்பட்டு அதனால் மக்கட்கு நலமில்லை எனத் தெரியவரின், தேசீயம் (Nationalization) என்னும் பெயரால் தனியார் தொழில் நிறுவனங்கள் நாட்டுடை மையாக்கப்படும்.

கூட்டுறவு முறை:

ஒரு நாட்டில் முதலாளி நடைமுறையும் அரசு நடை முறையும் ஆகிய இரண்டும் கலந்து இருப்பது கலப்புப் பொருளியல்’ எனப்பட்டது. நாட்டில் தொழிலாளர்கள் ஒன்று கூடித் தொழில் செய்து பொருள்களை உண்டாக்கி ஊதியத்தைப் பகிர்ந்து கொள்வது கூட்டுறவு (Co-operation) முறையாகும். இம்முறையில், பொருள்களை உண் டாக்குபவர் வேறு - விற்கும் வணிகர் வேறு-வாங்குபவர் வேறு-இடைத் தரகர் வேறு-என்ற பல நிலைகள் இல்லை. எல்லாம் செய்பவர்கள் குறிப்பிட்ட கூட்டுறவு இயக்கத் தைச் சேர்ந்த தொழிலாளர்களே யாவர். எனவே, வணிக ரும் இடைத் தரகரும் பெறக் கூடிய ஆதாயங்கள் தொழி லாளரையே சேர்ந்து விடுகின்றன. தொழிலாளர்க்குப்

– 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/82&oldid=544740" இலிருந்து மீள்விக்கப்பட்டது