பக்கம்:உலகு உய்ய.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

பொருள்கள் குறைந்த விலையில்-அடக்க விலையில் கிடைக் கின்றன.நிறுவனத்தின் ஊதியம் (இலாபம்) தொழிலாளர்க் குப்பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இந்தக் கூட்டுறவு இயக் கத்துக்கும் அரசின் உதவியும் மேற்பார்வையும் உண்டு. இல்லையேல், முன்னணியில் இருந்து கவனிக்கும் தொழி லாளர் தலைவர்கள், முதலாளிகள் போலவே ஏப்பம்விடத் தொடங்கி விடுவர். இது நடக்கவும் செய்கிறது.

மேலே கூறப்பட்டுள்ள எம்முறையாயினும் சரி-குறிப் பிட்ட முதலாளிகளாலேயோ அரசு என்னும் பெயரில் அரசு அலுவலர்கள் சிலராலேயோ பொது மக்கள் சுரண் டப்படாமல் ஆக்கம் பெறுமாறு செய்விக்கக் கூடிய ஊக்க முறைக் கோட்பாடு எதுவாயினும் ஏற்கத் தக்கதே.

இதுகாறும் பல முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள் ளன. இவை ஏட்டுச் சுரைக்காயாய் இருந்து விடலாகாது இவற்றை ஆய்ந்து நவ்லனவற்றை நாடுகளும் மக்களும் நடைமுறையில் கடைப்படிக்க வேண்டும். ஒவ்வொரு நாடும் தனக்கு ஏற்ற கோட்பாட்டை வகுத்துக் கொண்டு நடை முறையில் இயங்கி வருவது உண்மையே! ஆனால் சில நாடு களில், நாட்டுத் தலைவர்களின் ஊழல்களும் பொது மக்க ளின் பொறுப்பற்ற நிலையும் சேர்ந்து கொண்டு கோட் பாட்டைத் தோல்வியடையச் செய்து விடுகின்றன. உலகில் நல்லதே நடைபெறுக!

உழைப்பின் இன்றியமையாமை:

மக்களுக்குப் பல தேவைகள்” (wants) உள்ளன. அந் தத் தேவைகளுக்கு ஏற்ற பொருள்கள் கிடைத்துவிடின் 'நிறைவு’ (satistaction) ஏற்படுகிறது. தேவைகட்கும் நிறை வுக்கும் இடையே உழைப்பு (Labour) என ஒன்று வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/83&oldid=544741" இலிருந்து மீள்விக்கப்பட்டது