பக்கம்:உலகு உய்ய.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

கலப்படம், இன்ன பிற ஊழல்கட்கு இடம் இராது.

தொழிலாளியும் முதலாளியும்:

இந்தக் காலத்தில் தனி முதலாளிகள் பெருந் தொல்லைகட்கு ஆளாகாமல் இல்லை. அரசு எடுக்கும் நடவடிக்கை ஒரு புறம் இருக்க, தொழிலாளிகளும் அவர் கட்குத் தொல்லை கொடுப்பதைக் காண்கிறோம். பொது மக்கள் சிலர், செல்வர்களைத் தெருவில் கண்டதும், புளி மூட்டை - பிளாக் மார்க்கெட் - கள்ள நோட்டு: என்றெல்லாம் கூறித் துாற்றுகின்றனர். சில முதலாளி கட்கு அடிஉதை கிடைப்பதும் உண்டு. முறை தவறிய இச் செயல்கள் கூடா. அப்பன் - பாட்டன் வைத்துப் போன செல்வத்தால் பிறவி முதலாளிகளா யிருப்பவர்கள் சிலரே. வறிய குடும்பத்தில் பிறந்து வறுமையைச் சுவைத்துக் கொண்டே, இரவு பகலாக அயராது உழைத்துத் தம் சொந்த முயற்சியால் இடையில் செல்வர்களான முதலாளி கள் பலராவர். பெரும்பாலான முதலாளிகள், தாமும் தொடக்கத்தில் தொழிலாளிகளா யிருந்து, தமது சொந்த முயற்சியால் உழைத்து முன்னேறி முதலாளி யானவர் களே. இதனால் முதலாளிகள் தரப்பில் சொல்லப்படும் கருத்தாவது: குப்பனும் சுப்பனும் போலவே நாங்களும் தொழிலாளரா யிருந்தவர்களே. குப்பனும் சுப்பனும் சரி யாகத் தொழில் செய்வதில்லை ; கிடைத்த ஊதியத்தையும் குடிப்பதிலும் சூதாடுவதிலும் செலவிட்டுக் குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைத்தனர். ஆனால் நாங்கள் கடினமா யுழைத்தும் சிக்கனமாய்ச் செலவிட்டும் பணத் தைச் சேமித்துச் சொந்தத் தொழில் தொடங்கி முதி லாளிகளாய் முன்னேறி யுள்ளோம். சுப்பன்-குப்பன் முத லானவர்கள் முன்னேறுவதை நாங்கள் தடுக்க வில்லையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/87&oldid=544744" இலிருந்து மீள்விக்கப்பட்டது