பக்கம்:உலகு உய்ய.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

2. தனிப்பட்ட முதலாளிகள் ஊதிய நோக்குப் பேர வாவின் காரணமாக மட்டமான பொருள்களையே உண் டாக்குவர் - கலப்படமும் செய்வர் - விலைகளைத் தாறு மாறாக ஏற்றுவர் - உரிய காலத்தில் மக்களுக்குக் கிடைக்க முடியாதவாறு, பின்னால் மிகுந்த விலைக்கு விற்கலாம் என்ற ஆதாய நோக்குடன் பொருள்களைப் பதுக்கிவைப் பர். இதனால் பொருள் தட்டுப்பாடு ஏற்படுவதால் மக்கள் அல்ல லுறுவர். மிகுந்த விலையுடன் வெளிக் கொணரும் போதும் மக்கட்குத் துன்பமே யாம்.

3. தனியார் துறையில் முதலாளிகள் தொழிலாளி களின் வியர்வையை யன்று - குருதியையே கசக்கிப் பிழிந்து குடிப்பர். தொழிலாளிகட்கு உரிய கூலி கிடைக்காது; பெரிய அளவில் தொழிலாளிகள் ஏமாற்றப்படுவர்; அத னால் உண்மையான அக்கறையுடன் உழைக்காமல், 'ஏனோ - தானோ என்ற முறையில் வேலை செய்வர்; இதனால் பொருள்களின் தரம் குறையும்; விரைவில் கெட் டுப் போகும்.

இன்ன பிற காரணங்களைக் காட்டி, தனியார் துறை யினும் அரசுத் துறையே மேலானது என மற்றொரு சாரார் வாதிடுகின்றனர்.

தனியுடைமையும் பொதுவுடைமையும்:

இப்போது இந்தியா போன்ற நாடுகளில் தனியு டைமை - தனிச் சொத்துரிமை யிருப்பதால், நிரம்பப் பொருளிட்ட வேண்டும்-நிரம்பச் சொத்து சேர்க்க வேண் டும் என்னும் பேரவாவால், பலர், அல்லும் பகலும் ஒடி யாடி உழைத்துக் கொண்டுள்ளனர். இதனால் பலபொ ருள்கள் மிகுந்த அளவில் உண்டாக்கப்படுகின்றன. சொத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/91&oldid=544748" இலிருந்து மீள்விக்கப்பட்டது