பக்கம்:உலகு உய்ய.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

எல்லாரும் செல்ல முடியாது - ஒருசிலரே செல்ல முடியும், இதற்குக் காரணம் போதிய இடம் இன்மை மட்டுமன்று. வயல்வெளியில் உழவுத் தொழில் புரிதல், நெசவு, கட்டட வேலை முதலிய தொழில்களைச் செய்வதற்குப் போதிய ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதும் இன்றியமை யாக் காரணமாகும். எல்லாரும் பல்லக்கு ஏறினால் சுமப்பவர் யார்’ என்னும் பழமொழியை ஈண்டு ஒருபுடை ஒப்புமையாகக் கொண்டு நோக்கவேண்டும்.

அங்ங்னமெனில், ஒருசிலர் மட்டும் பல்லக்கு ஏற மிகப் பலர் சுமப்பது முறையா? - என்ற வினா எழலாம். இதற்கு வேறு மாற்று உண்டு. உழவு, நெசவு, கட்டடம் முதலிய கம்மிய வேலைகள், இன்ன பிறவற்றை யெல்லாம் அரசுத் தொழில் (உத்தியோகம்) போலவே அமைத்துச் செயல்பட வைக்கவேண்டும்.

இப்போது அரசுத் துறையில், வேலை தேடித் தரும் figyaucarib’ (Employment Exchange) groñrgyub off Qué, கம் செயல்பட்டு வருகிறது. படித்து வேலையில்லாமல் இருப்பவர்கள் இந்த நிறுவனத்தில் தம் பெயரையும் படிப்பு முதலியவற்றையும் பதிந்து வைக்கின்றனர். வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் வேறு நிறுவனத்தார் கள் இந்த நிறுவனத்துக்கு எழுதுகிறார்கள்; இந்த நிறுவ னம் உரிய ஆட்களை அனுப்பி வைக்கிறது. இது போலவே, ஒவ்வொரு தொழிலையும் ஒரு வாரியமாகக் கொண்டு, ஒவ்வொரு தொழிலுக்கும் வேலை தேடித் தரும் நிறுவனம் அமைக்க வேண்டும். இஃது அரசின் கண் காணிப்பில் நடைபெறலாம். ஒவ்வொரு தொழிலுக்கும் உரிய ஆள் கூலியை அரசு இந்த நிறுவனத்தின் வாயிலாக முன்கூட்டித் திட்டப்படுத்தி வைக்க வேண்டும். குறிப்பிட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/94&oldid=544751" இலிருந்து மீள்விக்கப்பட்டது