பக்கம்:உலகு உய்ய.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இத்தனை நாட்கட்கு உழவுத் தொழில் செய்ய இத்தனை ஆட்கள் வேண்டும் - கட்டட வேலை முடியும் வரை இத் தனை ஆட்கள் வேண்டும் - என்று இந்த நிறுவனத்தைக் கேட்டு உரிய ஆட்களைப் பெற்றுக் கொள்ளலாம். எல் லாத் தொழில் துறைக்கும் இந்த முறை ஒத்து வராவிடி னும், ஒரு சில தொழில்களுக்காவது இது ஒத்துவரலாம். வந்த வரையும் வரட்டுமே. வீட்டு வாடகை நிறுவனம்’ என ஒன்று செயல்படுகிறதல்லவா? வாடகைக்கு வீடு கிடைக்காதவரும், வாடகை தந்து வீட்டில் குடியிருக்க ஆள் கிடைக்காதவரும் இந்த நிறுவனத்தின் வாயிலாகத் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றனரல்லவா? இது போலவே எல்லாத் துறைகளிலும் முயன்று பார்க்கலாம்.

இந்த முறை ஒத்துவராத தொழில்கட்குக் கூட்டு றவு இயக்கம் தொடங்கி அதன் வாயிலாகப் பலருக்கும் உரிய முறையில் தொழிலும் தக்க ஊதியமும் கிடைக்கச் செய்யலாம். இப்போது கூட்டுறவு இயக்கம் சில துறை கட்கு நடைமுறையில் இருந்து வருவதாகத் தெரிகிறது. இன்னும் எல்லாத் துறைகட்கும் இவ்வியக்கத்தைப் பரப் பிச் செயல்பட வைக்க வேண்டும். எல்லாத் துறைகட் குமே அரசு கூலி யளவைத் திட்டப்படுத்த வேண்டும்.

மேற் கூறியவாறு, புதுப் புது வேலை தேடித் தரும் நிறுவனங்களும் புதுப் புதுக் கூட்டுறவு இயக்கங்களும் தோற்றி, அனைவருக்கும், அரசு அலுவல் போன்ற முறை யில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டாக்க வேண்டும். அரசுத் துறை மூலமோ பிறவற்றின் மூலமோ வேலை கிடைக்காதவர்கட்கு அரசு பண உதவி செய்து சிறு சிறு கைத்தொழில்கள் தொடங்க ஊக்கமளிக்க வேண்டும்; இது மட்டும் போதாது; இவர்கள் உண்டாக்கும் பொருள்கட்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/95&oldid=544752" இலிருந்து மீள்விக்கப்பட்டது