பக்கம்:உலகு உய்ய.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

(2) நாள்-நேரம் பார்த்தல், ஊழ்வினை நம்பிக்கை பழமையில் பற்று முதலிய மூட நம்பிக்கைகளால், மக்கள் பலர், உரிய காலத்தில் உரியதைச் செய்யாமல் காலத்தைக் கொன்னே கழிக்கின்றனர். நாம் முயற்சி செய்யாவிடின், எவரும் எதையும் கூரையைப் பிரித்துக் கொட்டிவிட முடி யாது. எனவே, மூட நம்பிக்கைகளைக் கைவிட்டு முயற்சி யில் முனைந்து இறங்க வேண்டும். குமர குருபர அடிக ளார் நீதி நெறி விளக்கம் என்னும் நூலில்,

'மெய் வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்.செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயி னார்’’.

எனக் கூறியுள்ளாங்கு, மக்கள் கருமமே கண்ணாயிருந்து கடமையாற்ற வேண்டும்.

(3) சிலர் வேண்டாத விளையாட்டுகளிலும் பொழுது போக்குகளிலும் காலத்தை வீணடிக்கின்றனர். ஒய்வு «Tairliği) “Goughov lost si spoud’ (Change of Programme) யாகும். எனவே, மூளை வேலை செய்து களைத்தவர்கள் உடல் உழைப்பு செய்தலும், உடல் வேலை செய்து களைத்தவர்கள் எழுதுதல்-படித்தல் போன்ற மூளை வேலை செய்தலும் ஒய்வும் பொழுது போக்குமாகும். வாளா படுத்திருத்தலே ஒய்வு என்பதன்று. எனவே, அவ ரவரும் தம்மால் இயன்ற அளவு காலத்தைப் பயனுடைய தாக்கவேண்டும்.

3.

(4) வேலைகளில் உயர்வு தாழ்வு பார்த்தலாகாது. பெரிய வேலை கிடைக்காவிடின் சிறிய வேலை செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/99&oldid=544756" இலிருந்து மீள்விக்கப்பட்டது