பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 14 i H 六

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

வொருவனும் வெறுக்கததககவனாயிருப்பான். அ செஸ்டர். பீேல்டு மரியாதைக்கு விலையில்லை. ஆனால், அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிவிடுகின்றது. கமாண்டேகு சீமாட்டி நல்ல பயிற்சியுள்ள மனிதன் எப்பொழுதும் பழகுவதற்கு இனியன். ைமாண்டெயின் நடை, உடை, பாவனைகள் சட்டங்களைவிட வல்லமை உள்ளவை. அ. ஏ. கார்லைல் அமைதி, ஆத்திரமோ ஆவேசமோ இல்லாமை ஆகிய இவை நேர்த்தியான பண்புகளைக் காட்டும் கனவான் ஓசையுண்டாக்க மாட்டான். சீமாட்டி சாந்தமாயிருப்பாள். ைஎமர்ஸன் ஒவ்வொருவருடைய உடலுக்கும், புத்திக்கும் தக்கபடி ஒரு நடத்தை அமைந்திருக்கும். நாம் மற்றவருடைய நடத்தையைப் பார்த்து நடக்கத் தொடங்கினல், அது போய்விடும். ரூஸோ மருந்து ★ 女 i TI மருந்துகளுள் முதன்னையானவை ஒய்வும். உபவாசமும். அ ஃபிராங்க்லின் (உணவு முதலியவற்றில் நிதானமும், உடற்பயிற்சியும் இல்லாததற்குப் பதிலாகத்தான் மருந்துகளை உபயோகிக்கிறோம். அ அடிபைன் தீப்ஸ் நகரில் ஒரு நூல் நிலையத்தின் நிலையில் இப்படி எழுதப்பட்டிருக்கின்றது: "ஆன்மாவுக்கு மருந்து. அ டயோடோரஸ் எலிகியூலஸ் மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். அ. திருவள்ளுவர்