பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா மேற்பட்ட கிளைக் கழகங்கள், இதற்கு நாடெங்கும் தோன்றின. - வலுவான கழகம் அமைந்த பிறகு, வெறும் பைபிள் வசனமும், கூட்டமும், கருத்தரங்கமும் இருந்தால் மட்டும் போதாது; அத்துடன் வலுவான உடலையும் கொண்டு இலட்சியத்தை எய்திடவேண்டும் என்று கழகத் தலைவர்கள் அனைவரும் விரும்பினர். 1864ம் ஆண்டு, இளம் கிறித்தவ தேசியத் தலைமைக் கழகத்தின் அங்கத்தினர்கள் கூடிய கூட்டத்தில், விளையாட்டுக்கும் பொழுது போக்குக்கும் முக்கியத்துவம் கொடுப்பதென்று முடிவு செய்தனர். முழு மனிதன் என்பவன் சமயப் பற்றும் ஒழுக்கமும் உடையவனாக மட்டுமல்ல. பலமான உடலமைப்பையும் பெற்றிருக்க வேண்டும் என்ற பெருங் கொள்கையைத் தலைமைக் கழகம் வகுத்து, வழிகாட்டியது. 1890ம் ஆண்டிற்குள் அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட ஜிம்னேலியங்கள் அமைக்கப்பட்டன. ஜிம்னேலியங்கள் வந்து விட்டன! அங்கத்தினர்கள் அதிகமாக சேர்ந்து விட்டனர். அவர்களுக்கு உதவி வழிகாட்டும் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத குறை, எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்தது. ஆகவே, உடற்கல்வி ஆசிரியர்களை உருவாக்கும் பள்ளி ஒன்றை ஆரம்பித்தனர். அதை அடுத்து, ஒரு பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டது. - இந்த நன்னோக்கில் தொடங்கப் பெற்றதுதான் எல்பிரிங் பீல்டு ஒய். எம். சி. ஏ. உடற் கல்விக் கல்லூரி, (1887) மற்றொரு கல்லூரி ஜார்ஜ் வில்லியம் உடற்கல்விக் கல்லூரி (1890).