பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 273 கொண்டு, ஆக்க பூர்வமான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றினார். * தேசிய மாணவர் படை அமைத்ததன் நோக்கம் மாணவர்களுக்கு ஒழுக்கமான நன்னடத்தை (Character) தலைமைப் பண்பை வளர்த்தல் (Leadership); நாடு காக்கும் L6&T60L 6,16msirégéo (Defence the Country). ஆரம்ப நாட்களில், கல்லூரி மாணவர்களுக்கு இதில் கட்டாயமாக சேர வேண்டும் என்ற நிபந்தனை இல்லாதிருந்தது. நாட்டில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு அவசரநிலை (Emergency) உண்டானபோது, கல்லூரி மாணவர்கள் அனைவரும் கட்டாயமாகத் தேசிய மாணவர் படையில் சேர்ந்தாக வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. மருத்துவ ரீதியாக உடல்நிலை சரியில்லாதவர்கள் தவிர, மற்ற மாணவர்கள் யாவரும் குறைந்தது 3 ஆண்டுகளாவது தேசிய மாணவர் படையில் சேர்ந்து பயிற்சிபெற வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்பட்டது. இராணுவத்தில் நன்கு பயிற்சி பெற்ற அதிகாரிகளால் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதி முக்கியமான இராணுவ உடற்பயிற்சிகளுடன், துப்பாக்கிக்டும் பயிற்சியையும் தருமாறு 1960ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் .[5-ا-الا ஒரு மாணவர் குறைந்தது 40 நிமிடம் உள்ள (ஒரு பீரியட்) பிரிவேளைபோல், ஓர் ஆண்டுக்கு 151 வகுப்புகளில், பயிற்சிகளில் கலந்திருக்க வேண்டும். அதுவும் வெளிப்புறங்களில் கூடாரங்களில் தங்கி, பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் வழிமுறைகள் வகுக்கப் பட்டிருந்தன.