பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 1987ம் ஆண்டில் இந்த இரண்டு கழகம் இணைந்தது. ஆனால், இந்திய விளையாட்டு ஆணையகம் என்ற பெயரையே ஏற்றுக் கொண்டது. தேசிய விளையாட்டுக் கழகங்கள் (National Federations) ஒவ்வொரு விளையாட்டுக்கும் தலைமைக் கழகமாகத் தேசியக் கழகங்கள் பல தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. அத்தனை தேசியக் கழகங்களும் இந்திய விளையாட்டு ஆணையகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், சுதந்திரமாகவே செயல்பட்டு வளர்கின்றன. அந்தந்த விளையாட்டுக் கழகம் அகில உலக' விளையாட்டுக் கழகத்தில் பதிவு செய்து கொள்ளவும், பங்கு பெறவும் கூடிய உரிமைகளைப் பெற்றிருக்கிறது. நாட்டில் பல மாநிலங்கள் பங்கு பெறக் கூடிய தேசியப் போட்டிகளை நடத்தவும், இந்தியநாட்டின்சார்பாகவீரர்களை வீராங்கனைகளைத் தேர்ந்தெடுக்கவும் கூடிய உரிமையைப் பெற்றிருக்கின்றது. இந்தக் கழகத்தின் மூலமே எந்த வீரரும் அகிலஉலகப்போட்டிகளில் பங்குபெறமுடியும். ஒவ்வொரு தேசியக் கழகமும் ஒவ்வொரு மாநிலத்திலும் தனது துணைக்கழகத்தை (State Associations) வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு தெள்ளத் தெளிய, வழிமுறைகளை வைத்துக் கொண்டு, விளையாட்டுக்களை வளர்த்து வரும் தேசிய விளையாட்டுக் கழகம் ஒவ்வொன்றும், எந்த ஆண்டு உருவானது என்பதைக் கீழ்வரும் பட்டியல், உங்களுக்கு நன்றாகவே தெரிவிக்கும்.