பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிச்சவிழ்க்கக் கொடுத்ததுமல்லாமல், இளிச்சவாய்ப் பட்டம். முடிமுடியாய்நட்டால், பிடி பிடியாய் விளையுமா? முடியும்வகை யோசியாமல், முயற்சி கொள்ளாதே. முடிவைத்த தலைமேலே சுழிக்குற்றம் பார்க்கிறதா. முட்டநனைந்தவனுக்கரமில்ல, முழுதுங்கெட்டவனுக்குத் துக்கமில்லை. முட்டநனைந்தாரர்க்குக் குளிரில்ல. முட்டற்றநாரிக்கு. இரட்டைப்பரியமா? முட்டாளுக்குக் கோபம். மூக்கின் மேலே. முட்டாளுக்கென்ன சொன்னாலும், கட்டோடே கேளான். முட்டாள் தனத்துக்கு, முதல்பாக்குக்காரன். முட்டியூட்டினகன்று. முதார்க்கன்று. முட்டுக்கு முட்டல்ல, மூடக்கதவுமல்ல, சந்நதிவாசலுக்குச் சாத்தக்கதவுமல்ல. முட்டுப்பட்டுச் செயம்வருமானால், குட்டுப்பட்டாற் குறை வென்ன? முட்டையிலே கூவி, முளையிலேகருகிறது. முட்டைக்குஞ்சை. பிட்டு வளர்த்தது. முண்டனுக்கு இரண்டாள், முதலைகெட்டிக்காரன், முடிவிலே சோம்பேறி, லே சோம்பேரி முதலுக்கு மோசமாகவிருக்கிறபோது, லாபத்துக்குச் சண்டை போடுகிறதா? முதலெடுக்கும்போதே, தப்பட்டைக்காரன் செத்தான். முதலேதுற்பலம், அதிலுங்கர்ப்பிணி. முதளைவாய்ப்பிள்ளை மீண்டு வருமா? முதற்கோணல், முற்றுங்கோணல் முதுகிலடித்தாலாறும். வயிற்றிலடித்தாலாறுமா? முதுகிலே புண்ணுண்டானால், செடியிலே நுழையப்பயம். முதுகைச் சொறியச் சொன்னால், சிற்றிடையைச் வியப்பம் சொறிகிறது. பம் முத்தளந்தகையினாலே, மோர்விற்கிறதா? முத்தால் நத்தைடெருமைப்படும். மூடர் எதினாலும் பெருமைப் படார். முத்தின் மரத்திலேதான், வயிரமிருக்கும். a 170 ar