பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடித்தொரு கூடையிடுவதிலும், பிடிச்சோறு அன்பாய்ப் போடுவது போதும். இடி விழுவானுக்கு வாழ்க்கைப்பட்டு, என்னேரமும் இடி சாமம். இடுகிற தெய்வம், எங்கு மிடும். இடுகிறவன் தன்னவனானால், இடைப்பந்தியி லிருந்தாலென்ன? கடைப்பந்தியி லிருந்தலென்ன? இடுப்பு வைத்த விடமெல்லாம். அடுப்பு வைத்தான். இடுப்பொடிந்த கோழிக்கு, உரற்குழியே கைலாசம். இடும்பு செய்வோர்க்கு, இராப்பகல் நித்திரையில்லை. இடுவது பிச்சை, பெறுவது மோட்சம். இடுவார் பிச்சையை, கெடுவார் கெடுக்கிறது. இடுவாளிடுவாளென்று எக்குற்றிருந்தாளாம். நாழி நெல் கொடுத்து நாலாசை தீர்த்தாளாம் ! இடைச்சன் பிள்ளைக்காரிக்கு, தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் பார்த்தாற்போல். இடைச்சி ஆத்தாள். கோனிச்சி இடைச்சி மாப்பிள்ளை. என்றைக்கு வருவான்? இடைத்தெருவிற் கோலம் வரும்போது, குசத்தெரு வெங்கே யென்கிறாள். இடையன் கெடுத்தது பாதி, மடையன் கெடுத்தது பாதி. இடையன் புத்தி, பிடறியிலே. இடையன் பேரிலே, சாத்தான் வந்த கதைபோலே. இடையன் வெட்டின . கொம்பு போலே. இடையாண்டியு மில்லை. குசத் தாதனு மில்லை. இடையூறு செய்தோன், மனையில் இருக்காது பேட்முதலாய். இட்ட கையை நத்துமோ, இடாத கையை நத்துமோ? இட்டதில், ஒன்றுங் குறையாது. இட்டதின் மேலே பேராசைப்பட்டால் கிடைக்குமா? இட்ட வீட்டுக்குப் பிட்டிட்டுக்கொண்டு, இடிந்த வீட்டுக்கு மண்ணிட்டுக் கொண்டு திரிகிறது. இட்டாருக் கிட்ட பலன், ஏரியடித்தாருக்குக் கோடி பலன்! இட்டார்க் கிடலும், செத்தார்க் கழலும். இட்டார் பெரியோர். இடாதார். இழிகுலத்தோர். இட்டு வைத்தாற் றினனவும், எடுத்து வைத்தாற் சுமக்கவுந் தெரியும். இணக்கமறிந்து இணங்கவேணும். 30