பக்கம்:ஊசிகள்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோழர் மீரா ஒரு கவிஞர் மட்டுமல்ல; அவர் ஒரு இலக்கிய இயக்கம். அன்னம், அகரம் பதிப்பகங்கள் மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டார். பல முகமறியாப் படைப்பாளிகளுக்கு முகங் கொடுத்தவர். சாமான்யப் படைப்பாளிகளைக்கூட அவர்களது நூல்களை துணிச்சலுடன் வெளியிட்டு, பிற்காலத்தில் அவர்கள் பெரிய படைப்பாளிகளாக வளர்வதற்கு ஒரு ஏணியாய் இருந்தார். அவர்களை நானும் நன்கறிவேன். ஒருவேளை அந்தப் படைப்பாளிகள் இதை மறுத்தாலும் மீரா வெளியிட்ட நூல்கள் அதற்கு நிரந்தரச் சாட்சியங்களாய் திகழுகின்றன. மற்றவர்களைப் பெரிய எழுத்தாளர்களாக்கி அவர்களை அறிமுகம் செய்வதிலேயே அதிக கவனம் செலுத்தியதால் அவரது எழுத்துப்பணி குறைந்து போனது தமிழின் துரதிருஷ்டம்.

கவிக்கோ அப்துல் ரகுமான் இந்த 'ஊசிகள்' தொகுப்பு பற்றி "குத்தலாக எழுதப்பட்டிருக்கிற இந்தக்கவிதைகளுக்கு ஊசிகள் என்ற பெயர் நயமாகத்தான் படுகிறது. ஆனால் இந்த மாதிரிக் 'குத்தல்' எழுத்துக்கள் உயர்ந்த இலக்கியமாக மதிக்கப் படுமா?" என்று கேட்கிறார். அதற்கு "அது எப்படியோ; என்னைப் பொறுத்தவரை இலக்கிய உப்பரிகையில் உலாவுவதைவிடச் சமுதாய நடைபாதைகளைச் செப்பனிடுவதையே முக்கியமாகக் கருதுகிறேன்" என்று மீரா விடையளித்துள்ளார்.

"எல்லாம் மாறுகிற காலமிது. இங்கே ஊசிகளின் கதாநாயகர்கள் ஊழல் பேர்வழிகள். மீராவுக்கு நயமான நகைச்சுவையுணர்வு இருக்கிறது. சமுதாயத்தைக்கூர்மையாகப் பொதுநல உணர்வோடு பார்க்கிறார். அவரது மொழிப் புலமையும் இதற்குக் கை கொடுத்திருக்கிறது" என்று கவிஞர் பாலசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு சின்னஞ்சிறு கவிதைத் தொகுப்பானாலும் கீர்த்திமிக்க ஒன்றாகும். கன்னத்திலடித்தாற்போல கவிதை

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/13&oldid=940411" இலிருந்து மீள்விக்கப்பட்டது